பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று
கன்டன அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5000 கன அடி நீரை திறந்து விட உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. இதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 18 வரை 18 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி நீரை திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையும் கர்நாடகா அரசு ஏற்கவில்லை .
பருவமழை குறைந்தால் நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான நீர் இல்லை .இதன் காரணமாக காவிரி ஆற்று நீரை தமிழகத்திற்கு தர மாட்டோம் என 40க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கர்நாடக மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தினால் 100க்கும் மேற்பட்ட கடைகள், தொழிற்சாலைகள், மற்றும் வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. பேருந்துகள் சரிவர இயங்கவில்லை. மாநில முழுவதும் வெறிச்சோடின. பெங்களூரில் கன்னட ரக்ஷன வேதிகே பெண்கள் அமைப்பினர் கர்நாடகா எம்பிக்கள் வீடுகளை முற்றுகையிட்டனர் .
மேலும் ஆனைக்கல் பகுதியில் டயர்களை எரித்து கன்னட அமைப்புனர் போராட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவுகிறது. பெங்களூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு போடப்பட்டது. போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூரோடு வாகனங்கள் நிறுத்தம்
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் தமிழக பேருந்துகள் ஓசூர் எல்லை பகுதியிலேயே நிறுத்தப்பட்டன .தமிழக பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன . பெங்களூருக்கு செல்லும் பயணிகள் கர்நாடகா அரசு பேருந்துகளில் செல்கின்றனர். பெங்களூரு செல்லும் பேருந்துகள் இல்லாமல் ஓசூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது .
மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு பெங்களூர் செல்லும் பேருந்துகளை ஓசூர் வரை மட்டுமே இயக்க திட்டமிட்டுள்ளனர். எல்லையை ஒட்டிய நாலு மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி, ஈரோடு, சேலம், மற்றும் நீலகிரியிலிருந்து கர்நாடகாவிற்கும் செல்லும் பேருந்துகளுக்கு ஆலோசனை வழங்க டிஜிபி ஆணை பிறப்பித்துள்ளார் .
இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து குறித்த சந்தேகங்களுக்கு 9498170430 மற்றும் 9498215407 என்ற எண்ணினல் தொடர்பு கொள்ள காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். தொடர் போராட்டத்தின் விளைவாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் காய்கறிகள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}