விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கர்நாடகத்தில் செம மழை.. கே.ஆர்.எஸ் அணைக்கு கிடுகிடு நீர்வரத்து!

Jun 27, 2024,10:21 AM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருவதால் கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 


கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள குடகு, உத்தர்கன்னடா மாவட்டங்களில் நேற்று முதல் பலத்த மழை  கொட்டி வருகிறது. இதனால் திரிவேணி சங்கமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெங்களூர் குடகு தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குடகு  மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் சூழலில் இன்று அப்பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கபினி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக நேற்று  பெய்த மிக கனமழையால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.




இந்த இரண்டு அணைகளும் நிரம்பினால்தான் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்பதால் இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது.


கேரளாவிலும் செம மழை 


கேரளாவில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது  இந்த பருவமழை மேலும் தீவிரமடைந்தது வயநாடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தலைநகர் டெல்லியிலும் கூட பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலையிலிருந்து டெல்லியில் நல்ல மழை பெய்து வருகிறது.


இந்திய வானிலை ஆய்வு மையம்: 


தமிழ்நாடு,  புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம்.

அதேபோல கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்