கணவரின் நீண்ட ஆயுளுக்காக பெண்கள் மேற்கொள்வதுதான் காரடையான் நோன்பு. மார்ச் 14ம் தேதி காரைடயான் நோன்பு வருகிறது.
காரடையான் நோன்பின் முக்கியமான பகுதி நைவேத்தியம். அதாவது, கார அடையும் இனிப்பு அடையும்தான் இந்த நைவேத்தியத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்த சமயப்பழங்கால உணவுகள் அரிசி மாவு, காராமணி போன்ற எளிய பொருட்களை கொண்டு செய்யப்படுகின்றன.
சாவித்திரி தனது கணவனுக்காக இருந்த கடினமான விரதம்தான் இந்த காரடையான் நோன்பு ஆகும். எனவேதான் இதை மனைவியர் தங்களது கணவரின் நலனுக்காக இருந்து வருகிறார்கள்.
சரி, எளிதாக குறைவான பொருட்கள் கொண்டு இந்த இரு வகையான உடல் ஆரோக்கியமான உணவுகளை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.
கார அடை செய்ய தேவையானவை
அரிசி மாவு – 1 கப்
காராமணி – ½ கப்
தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
கடுகு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
இஞ்சி – சிறு துண்டு (நறுக்கியது)
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
காராமணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவிடவும். நேரமின்மை என்றால், அரை மணி நேரத்திற்கு முன்பாக வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து பின்னர் 1 விசில் வரை குக்கரில் வேகவைக்கலாம்.
ஒரு வாணலியில் அரிசி மாவை லேசாக வறுத்து மணம் வரும் போது தனியாக வைக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் 2 கப் தண்ணீர், உப்பு, நறுக்கிய தேங்காய், வேக வைத்த காராமணி சேர்த்து கொதிக்க விடவும்.
நீர் கொதிக்க தொடங்கும்போது, வறுத்த மாவை மெதுவாக சேர்த்து நன்கு கிளறி மெல்லிய கட்டியாக்க வேண்டும்.
பிறகு, மாவு ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து பரிமாறலாம்.
இனிப்பு அடை செய்ய தேவையானவை
அரிசி மாவு – 1 கப்
காராமணி – ½ கப்
வெல்லம் – ¾ கப் (பொடித்தது)
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை
காராமணியை முன்கூட்டியே ஊற வைத்து பின்னர் 1 விசில் வரை வேக வைத்து வைத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் அரிசி மாவை பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். வெல்லத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்ட வேண்டும்.
இதனை மீண்டும் கடாயில் கொண்டு வந்து மிதமான தீயில் காய வைத்து, ஏலக்காய் தூள், காராமணி, மற்றும் தேங்காய் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லக் கரைசல் கொதிக்க தொடங்கும்போது, வறுத்த மாவை மெதுவாக சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
தேவையானால் சிறிது வெந்நீர் சேர்த்து மென்மையான பதத்திற்கு கொண்டு வந்து சிறிய உருண்டைகளாக தட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்கலாம்.
இந்த பாரம்பரிய உணவுகள் நோன்பின் சிறப்பை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். உங்கள் வீட்டில் இதை முயற்சி செய்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்!
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}