சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில்தேவும் இணைந்து கலக்கியுள்ள லால் சலாம் படத்தின் டப்பிங் வேலைகள் படு மும்முரமாக நடந்து கொண்டுள்ளன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம்தான் லால் சலாம். ஜெய் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோல் செய்துள்ளார். கூடவே நம்ம கபில்தேவும் இணைந்துள்ளார். கிரிக்கெட் குறித்த படம் இது. இதனால் கபில்தேவும் இணைந்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. அதில் ரஜினிகாந்த், விளையாட்டில் மதத்தைக் கலந்திருக்கீங்களே என்று கேட்கும் வசனம் பிரபலமானது.
இந்த நிலையில் இப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் லால் சலாம் படத்தில் தனது டப்பிங்கை முடித்து விட்டார். என்ன ஒரு அனுபவம்.. நீங்கதான் உண்மையான சார்மல் கேப்டன்.. படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன என்று கூறி மகிழ்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
அது சரி.. இந்தப் புகைப்படத்தைப் பாருங்க.. கபில் தேவ் யாருடன் பேசிட்டிருக்காருன்னு உங்களுக்குத் தெரியுமா.. கண்டுபிடியுங்க பார்ப்போம்!
லால் சலாம் படம் அடுத்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாமில் பிசியாக இருக்கிறார்.. மறுபக்கம் தந்தை ரஜினிகாந்த், ஞானவேல் படத்தில் படு பிசியாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவும், பொண்ணும்.. வேற லெவல் எனர்ஜி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}