கன்னியாகுமரி கண்ணாடிப்பாலம் நாளை திறப்பு.. சுற்றுலா பயணிகள் நடந்து களிக்க ஏற்பாடுகள் ரெடி!

Dec 29, 2024,05:15 PM IST

கன்னியாகுமரி : கன்னியாகுமரி திருவள்ளளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் நாளை (டிசம்பர் 30) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.


கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து, விவேகானந்தர் பாறைக்கு கடலுக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் வகையில் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் இந்த புதிய கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  




ரூ.37 கோடி மதிப்பீட்டில், 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  நவீன தொழில்நுட்பத்துடன் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் ஆகியவற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Bowstring arch bridge கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த பாலத்தில் 2.5 மீட்டர் அகலம் கொண்ட கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைப்பட்டுள்ளது. இதனால் கடலின் அழகை ரசித்தபடி பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையின் அழகையும் ரசிக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 


இதுவரை திருவள்ளுவர் சிலையில் இருந்து, விவேகாந்தர் பாறைக்கு செல்ல வேண்டும் என்றால் படகு மூலம் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் சென்று வந்தனர். ஆனால் இனி இந்த புதிய கண்ணாடி பாலத்தின் வழியாக நடந்து சென்றே சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். டிசம்பர் 30 ம் தேதி மாலை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த புதிய கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார். பிறகு திருவள்ளுவரின் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதற்கு பிறகு புத்தாண்டு முதல் இந்த புதிய கண்ணாடி பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.


இந்தியாவிலேயே கடல் மீது இப்படிப்பட்ட கண்ணாடிப் பாலம் முதல்முறையாக கன்னியாகுமரியில்தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள கூடுதல் சிறப்பாகும். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்