தூத்துக்குடி : மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், மீட்பு பணியினர் மற்றும் அதிகாரிகளுடன் தானே களத்தில் இறங்கி கலக்கி வருகிறார் திமுக எம்.பி.,யான கனிமொழி.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் பார்லிமென்ட்டில் சமீபத்தில் பாதுகாப்பை வளையங்களையும் மீறி உள்ளே நுழைந்த 2 பேர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்கை கண்டித்து எதிர்க்கட்சி எம்பி.,க்கள் பலர் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். அதோடு அவையிலும் கூச்சலிட்டனர். இதனால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 33 எம்பி.,க்கள் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுக.,வை சேர்ந்த லோக்சபா எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 13 திமுக எம்பி.,க்களில் கனிமொழியும் ஒருவர் .
கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக டில்லியில் நடக்கும் எம்.பி.,க்கள் கூட்டம் அனைத்திலும் பங்கேற்று மத்திய அரசை கேள்வி கேட்டு வந்தார் கனிமொழி. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளம் பாதிக்கப்பட்டதும் உடனடியாக கிளம்பி தூத்துக்குடி வந்துவிட்டார் கனிமொழி. தூத்துக்குடி தொகுதி எம்.பி.,யான கனிமொழி, தனது தொகுதி மக்கள் வெள்ளத்தில் இருப்பது, பார்லி., கூட்டம், அரசியல் போராட்டம் அனைத்தையும் ஓரமாக வைத்து விட்டு அதிகாரிகளுடன் களத்தில் இறங்கி வேலை செய்வது அந்த தொகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீட்புப் படையினருடன் படகில் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசியது, அவர்களுக்கு தேவையானவற்றை செய்வது என அதிகாரிகள், அமைச்சர்களுடன் சேர்ந்து தானும் களத்திற்கு நேரடியாக சென்று கலக்கி வருகிறார் கனிமொழி. அது மட்டுமல்ல தான் செல்லும் இடங்களில் தற்போது என்ன நிலவரம், என்ன நடக்கிறது என்ற தகவல்களையும் போட்டோக்களையும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகிறார்.
வழக்கமாக அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து விட்டு சென்று விடுவார்கள். அதற்கு பிறகு அதிகாரிகள் தான் மற்ற பணிகளை கவனித்துக் கொள்வார்கள். ஆனால் கனிமொழி மிக சாதாரணமாக களத்தில் இறங்கி பணியாற்றுவது கட்சி, அரசியல் தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது. தூத்துக்குடி புஷ்பாநகர் பகுதியில் வீட்டில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஒருவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கனிமொழி அனுப்பி வைத்தது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. நேரிலும், சமூக வலைதளங்களிலும் கனிமொழிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!