கங்குவா.. தமிழின் முதல் பான் இந்தியா படம்.. நாளை ரிலீஸ்.. தமிழகத்தில் தியேட்டர்கள் கம்மி!

Nov 13, 2024,05:19 PM IST

சென்னை: நடிகர் சூர்யாவின் மாறுபட்ட கெட்டப்பில், தமிழ் திரை உலகில் இதுவரை யாரும் கண்டிராத பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகியிருக்கும் காங்குவா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்சார் குழுவினர் இப்படத்தைப் பாராட்டி இருப்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


முதல் பான் இந்தியா படம் என்று கூறப்படும் கங்குவா, நாடு முழுவதும் நாளை கிட்டத்தட்ட 11,000 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது. அதேசமயம்,  தமிழ்நாட்டில் அமரன் படம் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதாலும், தியேட்டர் உரிமையாளர்கள் அதிக பங்குத் தொகை கேட்பதாலும்,  தமிழ்நாட்டில் குறைந்த தியேட்டர்களிலேயே கங்குவா வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.


சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதாணி நடித்துள்ளார். அனிமல் பட நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். சூர்யா இந்த படத்தில் முழுக்க முழுக்க மார்டனாக, ஒரு போர் வீரனாக  இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு கெட்டப்புகளில் நடித்தும் மிரட்டி இருக்கிறார் நடிகர் சூர்யா.




இந்த திரைப்படம் வரலாற்றுக் கதைக்களத்தை மையமாகக் கொண்டு ஃபேண்டஸி படமாக அதிக பட்ஜெட்டில் இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும்  ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. ஏனெனில் சூர்யா இதில் வித விதமான பல கெட்டப்புகளில் தோன்றியுள்ளார். அதே சமயத்தில் கடல் கப்பலில் ஆக்ஷன் காட்சிகள், விமான நிலையத்தில் சண்டைக் காட்சிகள் ஆகியவை இந்த ட்ரைலரில் இடம்பெற்றிருந்தன. இதனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.  எனவே ட்ரெய்லரை விட திரையில் படம் இன்னும்  பிரம்மாண்டமாக மாசாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். 


இது மட்டுமில்லாமல் 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு இப்படத்தில் அந்தக் கால கட்டடம், மார்டன் உலகம் என தத்ரூபமாக பிரதிபலித்துள்ளதாம். மேலும் தமிழில் இருந்து முதல் பான் இந்திய படமாக உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இப்படம் சென்சார் குழுவிற்கு சென்றது. அப்போது இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் அளிக்கப்பட்டு,  மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என கூறியதாக தகவல்கள் கசிந்து வந்தன. இதனையடுத்து படத்தின் எதிர்பார்ப்பு மேலும் எகிற வைத்துள்ளது ஒன்றே சொல்லலாம்.


இந்தியா முழுவதும் பல்வேறு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும் காங்குவா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. நாளை ஒரே நாளில் உலகம் முழுவதும் 10,500 முதல் 11,500 திரையரங்குகளில் இப்படம் வெளியாக தயாராக இருக்கிறது. மேலும் இந்திய சினிமாவில்  இப்படம் இதுவரையிலான சாதனைகளை தகர்த்தெறியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படம் குறித்து இயக்குனர் சிவா கூறுகையில், படத்தின் இறுதியில் யாருடைய கேமியோ இருக்கிறது என்பதுதான் இப்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது. அது சஸ்பென்ஸ் என்றாலும் அந்த கேமியோ ரசிகர்கள் எதிர்பார்ப்பை விட பல மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்