சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.. கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை!

Nov 01, 2024,10:16 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை :   முருகனுக்குரிய மிக முக்கியமான விரதம் சஷ்டி விரதமாகும். மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் சஷ்டியை மகா கந்தசஷ்டி என அழைப்பதுண்டு.  இது அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை துவங்கி, சப்தமி வரை ஏழு நாட்கள் இருக்கும் விரதமாகும். 


சஷ்டி விரதம் என்பது யார் வேண்டுமானாலும், என்ன பிரச்சனை தீர வேண்டும் என்றாலும், எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றாலும் இருக்கலாம். இருந்தாலும் குழந்தை வரம் வேண்டுபவர்களே இந்த விரதத்தை அதிகமாக இருப்பதுண்டு. சஷ்டி விரதம் இருப்பதில் பல வகைகள் உண்டு. அவற்றுள் மிக கடுமையான விரதமாக கருதப்படுவது மிளகு விரதமாகும். அதாவது முதல் நாளில் 1 மிளகு, 2ம் நாளில் 2 மிளகு, 3ம் நாளில் 3 மிளகு என ஒவ்வொரு நாளுக்கு ஒரு மிளகு என படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்வதாகும். சஷ்டியின் கடைசி நாளில் 7 மிளகு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த கடுமையான விரதத்தை இன்றும் பலர் கடைபிடிக்கிறார்கள்.




உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பவர்கள், மருந்து எடுத்துக் கொள்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உணவு உண்ணாமல் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. பெரும்பாலானவர்கள் பால், பழம் அல்லது ஒரு வேளை உணவு மட்டும் எடுத்துக் கொண்டு இவ்விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். உணவு உட்கொண்டு கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மெளன விரதம் இருக்கலாம். அதே போல் விரதம் இருப்பவர்கள் பகலில் உறங்கக் கூடாது.


குழந்தைப் பேறு இல்லாதவர்கள், வேலை கிடைக்க வேண்டும், திருமணம் ஆக வேண்டும் என்பவர்கள் சஷ்டி விரதம் இருக்கலாம். வீடு வாங்க வேண்டும், சொத்து பிரச்சனை தீருவதற்கு, நோய் தீர, மற்ற அனைத்து பிரச்சனையில் இருந்து நல்வாழ்வு வாழ கடைபிடிக்கலாம். 


இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 08ம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 08ம் தேதி, கந்தசஷ்டியின் ஏழாவது நாளில் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. 


சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் காலை, மாலை இரு வேளையும் பூஜை செய்து வழிபட வேண்டும். கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், ஷண்முகக் கவசம், குமாரஸ்துவம் போன்றவற்றை படித்து வழிபடுவது சிறப்பு. முருகன் திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகே சஷ்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 


வீட்டில் இருந்து சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டால் தீராத பிரச்சனைகளும் தீரும். நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியே இதற்கு சாட்சி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமரன் படம் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு.. கமல்ஹாசன் நன்றி!

news

ராமநாதபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. நவம்பர் 3ம் தேதி.. ரிசர்வேஷன் ஓபன் ஆயிருச்சு!

news

3 நாட்களில் 5.25 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம்.. பட்டையைக் கிளப்பிய கிளாம்பாக்கம்!

news

AIADMK.. நவ. 6ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் மாநாட்டு தாக்கம் இருக்குமா?

news

நவம்பர் 1.. தமிழ்நாட்டின் எல்லை காத்த மாவீரர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் புகழாரம்!

news

Divya Sridhar weds Kris Venugopal.. இரு மனம் இணைவதுதானே திருமணம்.. இதை விமர்சிப்பது ஏனோ!

news

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.. கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை!

news

சென்னையில் இன்று.. ஆங்காங்கே திடீர் கன மழை இருக்குமாம்.. குடையோடு வெளியே போங்க!

news

நவம்பர் 01 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்