காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று ரவுடி பிரபா என்பவரை ஓட ஓட வெட்டிக் கொன்ற 2 ரவுடிகள் இன்று அதிகாலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அருகே உள்ள பல்லவன் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபா என்கிற பிரபாகரன். அப்பகுதியில் ஹிஸ்டரி ஷீட்டராக வலம் வந்த ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தேமுதிக நிர்வாகி சரவணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்திருந்த பிரபாகரனை நேற்று ஒரு கும்பல் காரில் வந்து மடக்கியது. அவர்களில் இருவர் காரை விட்டு இறங்கி பிரபாவை வெட்ட ஆரம்பித்தனர். இதனால் பிரபா உயிர் தப்ப ஓடினார். அவர்கள் விடவில்லை. துரத்திப் பிடித்து மடக்கி சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி விட்டனர்.
பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த என்கவுண்டர்
இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். பிரபாகரன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் புதிய ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
புதிய ரயில் நிலையம் அருகே இந்திரா நகர் சர்வீஸ் சாலையில் பதுங்கி இருந்த ரவுடிகளை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டனர். அப்போது, ரவுடிகள் காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ரவுடிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ரவுடிகள் ரகுரவன், கருப்பு அசேன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகளின் கூட்டாளிகள் 7 பேரை தற்போது போலீஸார் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை டிஐஜி பொன்னி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் டிஐஜி பொன்னி நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.
காஞ்சிபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஹிஸ்டரி ஷீட்டர்கள் இருப்பதாக கூறிய டிஐஜி பொன்னி, ரவுடி பிரபா கொலை வழக்கில் மேலும் 2 பேரைத் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}