வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு சவால் விட்டுள்ளார், துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரா களம் இறங்கும் கமலா ஹாரிஸ்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். முன்னாள் அதிபரான டிரம்ப், 2வது முறையாக அதிபர் ஆகும் கனவுடன் களம் குதித்துள்ளார். மறுபக்கம் தற்போதைய அதிபர் ஜோ பிடன் போட்டியில் இருந்து வந்தார். ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகி விட்டார்.
ஜோ பிடனுக்குப் பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கவுள்ளது. கமலா ஹாரிஸ் அறிவிப்பால் தொய்வடைந்திருந்த ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். கருத்துக் கணிப்புகளிலும் டிரம்ப்பை முந்த ஆரம்பித்துள்ளார் கமலா ஹாரிஸ்.
இந்த நிலையில் விரைவில் கமலா ஹாரிஸுக்கும், ஜோ பிடனுக்கும் இடையே விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது இதைத்தான் ஜனநாயகக் கட்சியினர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். காரணம், ஜோ பிடனுக்கும் - டிரம்ப்புக்கும் இடையே நடந்த விவாதத்தில் பிடன் பெருமளவில் சொதப்பியிருந்தார். இதை டிரம்ப் கேலி செய்து தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு விட்டார். விவாதத்தின் காரணமாகத்தான் ஜோ பிடன் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. எனவே எந்த இடத்தில் ஜனநாயகக் கட்சிக்கு சரிவு ஏற்பட்டதோ அங்கிருந்தே அதிரடி காட்ட கமலா ஹாரிஸ் ஆர்வமாக உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது, நல்லது டொனால்ட், விவாத மேடையில் என்னை சந்திப்பதை நீங்கள் மறுபரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், ஒரு பழமொழி உண்டு. உங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அதை என் முகத்துக்கு நேராக சொல்லுங்கள் என்று கூறியுள்ளார் கமலா ஹாரிஸ். அவரது இந்த ஓபன் சேலஞ்ச் ஜனநாயகக் கட்சியினரிடையே பயங்கர ஆதரவை ஏற்படுத்தியுள்ளது.
நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகள்.. விருந்து வைத்த விஜய்.. வாசலில் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
தொடர் உயர்வில் தங்கம்... சவரன் ரூ.58,000த்தை கடந்தது.. திகைப்பில் மக்கள்
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
சனாதன சக்திகளை ஓங்க விட்டு விடாதீர்கள்.. திரைத்துறையினருக்கு திருமாவளவன் கோரிக்கை
{{comments.comment}}