ரிமோட் இன்னும் கையில்தான் இருக்கு.. கமல்ஹாசன் உற்சாகப் பேச்சு.. மார்ச் 29 முதல் சூறாவளி பிரச்சாரம்!

Mar 24, 2024,05:01 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக  வருகிற 29ம் தேதி முதல் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இன்று கட்சியினர் மத்தியில் அவர் பேசும்போது மக்கள் நீதி மய்யம் கட்சி முழுமையாக திமுக வசம் போகவில்லை என்பதை சூசகமாக உணர்த்திப் பேசினார்.


மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிடவில்லை. மாறாக ராஜ்யசபா தேர்தலில்தான் அவர்களுக்கு ஒரு சீட் தரப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் தீவிரப் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபடவுள்ளார்.


இந்த நிலையில் தனது கட்சியினருக்கான தேர்தல் வழிகாட்டும் கூட்டத்தில் கமல்ஹாசன் இன்று பங்கேற்றுப் பேசினார். அப்போது அவரது பேச்சு படு உற்சாகமாக இருந்தது. தொண்டர்கள் ரசித்துப் போய் கேட்டனர். கமல்ஹாசன் பேச்சிலிருந்து சில:




சாதியத்திற்கு எதிரானவன் நான்.  எனது தந்தை கடைசி வரை காங்கிரஸ்காரராக இருந்தவர். கதர் அணிந்து வலம் வந்தவர். அந்த வழி வந்த எனக்கு சந்தர்ப்பவாதம் பிடிக்காது. சந்தர்ப்பம் வேறு, வாதம் வேறு. நமது வாதத்தை சந்தரப்பத்துக்கு ஏற்ப மாற்ற முடியாது. அப்புறம் ரிமோட்டை எடுத்து எறிஞ்சீங்களே டிவியை உடைச்சீங்களேன்னு கேட்கலாம்.  அங்கதானே போறீங்கன்னும் கேட்கலாம்... இன்னும் ரிமோட் நம்ம கையில்தான் இருக்கு.  டிவியும் அங்கேயேதான் இருக்கு. அது நம்ம ரிமோட், நம்ம டிவி. ஆனால், டிவிக்கான கரண்ட்டையும், பேட்டரியைும் உருவும் சக்தி உருவாகிக் கொண்டுள்ளது. இதுக்குப் பிறகு  இதை நான் எறிந்தால் என்ன வச்சிருந்தால் என்ன.. அந்த மாதிரி செய்கைகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும்.


பிரதமருக்கு கொடுக்க வேண்டிய வணக்கத்தைக் கொடுப்பேன். அது அவருக்கான பணிவு அல்ல. மக்களின் நாயகம் இன்னும் இருக்கிறது என்பதற்காக தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன். 70 வருடமாக சொல்லிச் சொல்லி சாதியம் பேசாதீர்கள் என்று வளர்ந்தவர்களிடம், மறுபடியும் சாதி கற்றுக் கொடுக்கப் பார்க்கிறார்கள். அந்தத் திட்டத்தை வகுத்துத் தரும் கட்சியோ, திட்டமோ, யாராக இருந்தாலும் தகர்க்க வேண்டியது என் கடமை.


என்னைக் கேட்டார்கள்..  எதிரி யார் என்பதை முடிவு செய்த பிறகே வெற்றி நிச்யம். ஆனால் நீங்க மய்யம்னு சொல்றீங்களே என்றார்கள்.  அதான் சொல்லிட்டேனே. எனது எதிரி நான் முடிவு செய்து விட்டேனே. எப்போதும் சாதியம்தான் எனது எதிரி. நினைவு இருக்கும் வரை, நினைவு போகும் வரை அதுதான். சாதியம் போக வேண்டும் என்றால் சாதி வாரிக் கணக்கெடுப்பு ஏன் என்று கேட்பார்கள்.


இன்னும் யாரெல்லாம் விலங்கிடப்பட்டுள்ளனர் என்று தெரிய வேண்டும். எனவேதான் சாதி வாரி கணக்கெடுப்பு தேவை.  முஸ்லீம்களுக்காக சாகவில்லை காந்தி. மதச்சார்பின்மைக்காக குண்டேந்தி இறந்தவர் அவர். எல்லா வீட்டிலும் பனழைய பொருட்கள் இருக்கும். போகி வரும்போது தெரியும் .. எது இருக்கும், எது போகும் என்று.


எனக்கு எந்த ஏரியாவெல்லாம் கிடைக்கும் என்று பயந்தார்களோ அங்கெல்லாம் நான் போகப் போறேன். இது தியாகம் அல்ல.. வியூகம்.  இது எனக்கு கிடைக்கும் மரியாதை அல்ல.. நமக்குக் கிடைக்கும் மரியாதை என்றார் கமல்ஹாசன்.


கமல்ஹாசனின் பிரச்சாரத் திட்டம்


மார்ச் 29ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கும் கமல்ஹாசனின் பிரச்சாரத் திட்டம் வருமாறு:


மார்ச் 29 ஈரோடு, 30ம் தேதி சேலம், ஏப்ரல் 2ம் தேதி திருச்சி, 3ம் தேதி சிதம்பரம், 6ம் தேதி ஸ்ரீபெரும்புதூர், 7ம் தேதி சென்னை, 10ம் தேதி மதுரை, 11ல் தூத்துக்குடி, 14ம் தேதி திருப்பூர், 15ம் தேதி கோவையில் பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் 16ம் தேதி பொள்ளாச்சியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.


சமீபத்திய செய்திகள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

news

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

news

Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

news

விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்