அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.. இனியாவது கவனமாக இருக்க வேண்டும்.. கமல்ஹாசன்

Jun 23, 2024,02:57 PM IST

கள்ளக்குறிச்சி: குடிக்கும் பழக்கம் உடையவர்கள் அளவை மீறிப் போனதால்தான் கள்ளக்குறிச்சியில் இவ்வளவு பெரிய துயரம் நடந்து விட்டது. மக்கள் இனியாவது கவனம் இருக்க வேண்டும். கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் நலனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசும் மாவட்டந்தோறும் மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி விட்டது. பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கள்ளச்சாராயத்தைக் குடித்து இத்தனை பேர் பலியானது வருத்தம் அளிக்கிறது. இவர்கள் மீது அனுதாபப்படுகிறேன். ஆனால் இவர்கள் அளவை மீறி விட்டார்கள். கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.  முதலில் அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  


எப்போதாவது குடித்தால் சரி, குடிப்பதில் அளவு இருக்க வேண்டும். அளவோடு இருந்தால் எதுவும் பிரச்சினை இல்லை. சர்க்கரை வியாதி வந்தால் எப்படி கட்டுக்குள் இருக்கிறோமோ அதுபோல இதையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அளவை மீறி நடந்து கொண்டால் அது துயரத்தில்தான் போய் முடியும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


யாரையும் குடிக்காதீங்கன்னு சொல்ல முடியாது. அளவோடு குடிங்கன்னு, கவனமா இருங்க, உடல் நலத்தைப் பார்த்துக்கங்கன்னு சொல்ல முடியும். அரசு  மன வள ஆலோசனை முகாம்களை தொடங்க வேண்டும். மறு வாழ்வு மையங்களை தொடங்க வேண்டும் என்றார் கமல்ஹாசன்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்