இந்தியன் 2 விமர்சனம் : ரசிகர்களின் மனங்களை கவர்ந்தாரா இந்தியன் தாத்தா?.. படம் எப்படி இருக்கு ?

Jul 12, 2024,11:16 AM IST

சென்னை : நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இந்தியன் 2 படம் உலகம் முழுவதிலும் தியேட்டர்களில் ஜூலை 12ம் தேதியான இன்று ரிலீசாகி உள்ளது. கொரோனாவிற்கு முன்பே படம் துவங்கப்பட்டு, பல பிரச்சனைகள், வழக்குகளை தாண்டி ஒரு வழியாக படம் இன்று ரிலீசாகி விட்டது.


1996ம் ஆண்டு டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் ரிலீசாகி உள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 படம் எப்படி இருக்கு? ப்ளஸ் என்ன, மைனஸ் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.


இந்தியன் 2 படத்தின் கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. இந்தியன் படத்தின் தொடர்ச்சி தான். ஊழல், மோசடிகளை களை எடுக்க மீண்டும் இந்தியா திரும்பி வருகிறார் இந்தியன் தாத்தா. தற்போதைய பிரச்சனைகள் பலவற்றையும் கையில் எடுத்து, அதற்கு எதிராக இந்தியன் தாத்தா போராடுவது தான் படத்தின் கதை. ஃபர்ஸ்ட் பாதி கொஞ்சம் மெதுவாகவே செல்கிறது. செகண்ட் ஆஃப் விறுவிறுப்பாக செல்கிறது. க்ளைமாக்சில் இருக்கும் ட்விஸ்ட் "செம" . தியேட்டர்களில் ரசிகர்கள் அதீத உற்சாகத்துடன் கைதட்டி வரவேற்கின்றனர். 




ஷங்கர் ஏற்கனவே சொன்னது போல் இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்படுகிறது.  சொல்லப் போனால் இந்தியன் 2 ஐ விட இந்தியன் 3 டிரைலர் ரசிகர்களை இன்னும் அதிகமாக கவர்ந்துள்ளது. இதை பார்ப்பதற்கே அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என சொல்லப்படுகிறது.  அதாவது இந்தியன் 2வை விட இந்தியன் 3 தான் பட்டையைக் கிளப்புமோ என்ற எதிர்பார்ப்பு இப்போதே வந்து விட்டது.


இந்தியன் 2 படம் இந்தியன் தாத்தாவிற்கு மட்டுமல்ல ஷங்கருக்கும் தமிழில் மீண்டும் ஒரு நல்ல கம்பேக் கொடுத்துள்ளது. வழக்கமான பிரம்மாண்டங்களுடன் அசத்தி உள்ளார். டைட்டில் கார்டிலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார் ஷங்கர். வழக்கமாக ஷங்கர் படங்களில் டாப் ஹீரோக்களுக்கு அவர் வடிவமைக்கும் டைட்டில் கார்டே மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தும். எந்திரன், எந்திரன் 2.ஓ ஆகிய படங்களுக்கும் சரி, கேம் சேஞ்சர் படத்திற்கு அவர் கொடுத்த டைட்டில் கார்டு ஸ்கோர் செய்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமலுடன் இணையும் படத்திற்கு சும்மாவா விடுவார்? கமலின் முதல் படம் துவங்கி, இந்தியன் 2 வரையிலான பல்வேறு கெட்அப்களை வைத்தே டைட்டில் கார்டு போட்டு விட்டார். கமல் ரசிகர்களை இது கொண்டாட வைத்துள்ளது. கமல்ஹாசனுக்கு சரியான டிரிப்யூட்டாக அமைந்து விட்டது இந்த டைட்டில் கார்ட்.


ஏ.ஆர்.ரஹ்மானின் பிஜிஎம் உடன் என்ட்ரி கொடுக்கிறார் இந்தியன் தாத்தா. அது மட்டுமல்ல இந்தியன் தாத்தா கைது செய்து அழைத்துச் செல்லப்படும் போது சோஷியல் மீடியாவில் வெளியாகும் விமர்சனங்களை பார்த்து அவர் மனம் உடைந்து நடந்து செல்லும் போதும் கப்பலேறி போயாச்சு பிஜிஎம் ஒலிக்கிறது. படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்கள் பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். படம் முழுவதும் கமலே ஆக்கிரமித்திருந்தாலும் அதையும் தாண்டி சித்தார்த் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். வீரசேகரனாக வரும் இளமை கால கமல், செகண்ட் ஆஃபில் சிக்ஸ் பேக்குடன் வரும் இந்தியன் தாத்தா ஆகியோரின் என்ட்ரியின் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.


படத்தின் ப்ளஸ் :


அனிருத்தின் இசை, ஷங்கரின் திரைக்கதை, டைரக்ஷன், சித்தார்த்தின் நடிப்பு ஆகியவை படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். விறுவிறுப்பான சண்டை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஒளிப்பதிவு, பிரம்மாண்ட காட்சி அமைப்பு ஆகியவை பிரம்மிக்க வைக்கிறது. வர்மக்கலையை மிக அற்புதமாக கையாண்டு, அதை விவரித்துள்ள ஷங்கரின் விதம் பாராட்டை பெறுகிறது.


படத்தின் மைனஸ் :


முதல் பாதி மெதுவாக செல்வது போராடிக்க வைக்கிறது. மிக நீண்ட வசனங்கள் படத்திற்கு பெரிய மைனசாக உள்ளது. படத்தை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கியிருக்கலாமோ என்ற உணர்வு ஏற்படுகிறது. வீரசேகரன், இந்தியன் தாத்தாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள ஓவர் பில்டப்பும் கொஞ்சம் சலிப்படைய வைக்கிறது.


இருந்தாலும், மொத்தத்தில் பார்த்தால், வெயிட் பண்ணி, பல ஆண்டுகள் கழித்து வந்தாலும் ரசிகர்களிடம் இந்தியன் தாத்தாவிற்கு வரவேற்பு உள்ளதையே இந்தியன் 2 படம் காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் கூட, "இந்தியன் தாத்தா வந்துட்டாரு" என உற்சாகமாக கூச்சலிடுவது படத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வரவேற்பு. மொத்தத்தில் இந்தியன் தாத்தா ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து விட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்