"உலக நாயகன்" பிறந்த நாள்.. திரண்டு வந்து கமல்ஹாசனை வாழ்த்திய தமிழ் உலகம்!

Nov 07, 2023,12:26 PM IST

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 69வது பிறந்த  நாள். திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பல்துறைப் பிரமுகர்கள் கமல்ஹாசனை வாழ்த்தியுள்ளனர்.


களத்தூர் கண்ணமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது தக் லைப் வரை அவர் தொடர்ந்து மிரட்டிக் கொண்டேதான் இருக்கிறார் நடிப்பில். இவருடைய படங்கள் என்றால் தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். ஒரு காலத்தில் காதல் இளவரசன், பின்னர் காதல் மன்னன், புன்னகை மன்னன், ஆண்டவர் என்று பற்பல பெயர்களால் அறியப்பட்ட கமல்ஹாசன் இன்று உலக நாயகனாக உயர்ந்து நிற்கிறார். 


நடிப்புக்காக  4 தேசிய விருதுகளும், சிறந்த தயாரிப்பாளருக்கான ஒரு தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகளும், ஆந்திரா அரசின்  4 நந்தி விருதுகளும் ,19 பிலிம்பேர் விருதுகளும், பல இந்திய விருதுகளையும் பெற்று சாதனை படைத்தவர்.  விருதுகளே எனக்கு வேண்டாம், போதும் என்று சொல்லி பிலிம்பேருக்கு கடிதமே எழுதியவர் கமல்ஹாசன். 




இன்று கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை  ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் முன்பு அவருடைய ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் காலையிலேயே கூடியிருந்தனர். ரசிகர்களைச் சந்தித்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 


தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கலை உலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நலம் சூழ வாழிய பல்லாண்டு என்று கூறியிருந்தார்.


கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட வாழ்த்து பதிவில், நீங்கள் ஒரு சிறந்த கலைஞராகவும் சமூக மற்றும் அரசியல் ஆர்வலராகவும் மக்களின் இதயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளீர்கள். உங்களுக்கு மேலும் பல மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வருடங்கள் அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வெளியிட்ட பதிவில், ஹாப்பி பர்த்டே கமல்ஹாசன் சார்.. உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். 


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யா, அமீர்கான், ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னையில் நடந்த கமல்ஹாசன் பிறந்த நாள் விழாவிலும் பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்