கமல்ஹாசன் பிறந்த நாள்.. நீலாங்கரையில் ஒன்று கூடுவோம்.. மக்கள் நீதி மய்யம் அழைப்பு!

Nov 04, 2023,03:03 PM IST

சென்னை: தமிழ்த் திரையுலக முன்னோடிகளில் ஒருவரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்த  நாள் நவம்பர்  7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இதற்காக மக்கள் நீதி மய்யம் சிறப்பு ஒன்று கூடலை சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது.


உலகநாயகன் என்று சிறப்பிற்குரிய நடிகர் கமல்ஹாசன் 1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடகராக, பாடலாசிரியராக, இயக்குநராக, திரைக்கதாசிரியராக, டான்ஸராக, டான்ஸ் மாஸ்டராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக, கவிஞராக பல முகம் கொண்டவர்.


ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். மக்கள் நீதி மய்யம் என்ற பெரில் கட்சியினை ஆரம்பித்து நடத்தி வருகின்றார். இந்த நிலையில் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள்  வருகிறது. இதை சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கொண்டாடவுள்ளனர்.




இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கை:


நமது தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாட நமது 

கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பிய வண்ணம், தலைவரின் பிறந்தநாளான 07-11-2023 அன்று, மாலை 3 மணிக்கு சென்னை, நீலாங்கரையில் உள்ள  ஆர்.வி. கன்வென்சன் அரங்கில் தொண்டர்களும், நற்பணி நம்மவர்களும் சூழ, வெகுசிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.


ஆழ்ந்த அறிவும், எல்லையில்லா ஆற்றலும், பலகோடி மக்களை ஈர்க்கும் வல்லமையும், தேர்ந்த ஆளுமையும் கொண்ட நமது தலைவரின் பிறந்தநாளை  கொண்டாடவும், நாடாளுமன்றத் தேர்தலை எழுச்சியோடு எதிர்கொள்ளவும் நவம்பர் 7 (செவ்வாய்க்கிழமை) அன்று நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம்.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நற்பணி நம்மவர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் ம.நீ.ம உறுப்பினர்கள் அனைவரையும் தலைவர் நம்மவரின் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடிட வரவேற்கிறோம். நாளை நமதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்