பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு கனத்த இதயத்துடன் விலகுகிறேன்.. கமல்ஹாசன் அறிவிப்பு!

Aug 06, 2024,06:28 PM IST

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.


தமிழ்த் திரையுலகின் மாபெரும் ரியாலிட்டி ஷோவாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது பிக் பாஸ். 2017ம் ஆண்டு இந்த ஷோவை விஜய் டிவி ஒளிபரப்பத் தொடங்கியது. கமல்ஹாசனை ஹோஸ்ட்டாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, கமல்ஹாசனின் பங்களிப்பால் மிகப் பெரிய ஹிட்டாக மாறியது. 


என்னதான் ஸ்கிரிப்டட் நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு சென்றார் கமல்ஹாசன். மக்களின் பேசு பொருளாகவும் இந்த நிகழ்ச்சி இருந்து வந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் 8வது ஷோவை தன்னால் நடத்த முடியாது, விலகிக் கொள்கிறேன் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது பரபரப்பையும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுகொடர்பாக  கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கை:




ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நமது பயணத்துக்கு ஒரு இடைவெளி விடுகிறேன் என்ற தகவலை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட திரையுலக கமிட்மெண்டுகள் காரணமாக என்னால் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொடர்ந்து செயலாற்ற முடியாது.


உங்களது இல்லங்களை அடையும் பாக்கியத்தை நான் பெற்றிருந்தேன். போட்டியாளர்களும், பார்வையாளர்களும் என் மீது அன்பும் அக்கறையும் காட்டினீர்கள். அதற்கு நான் எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன். உங்களது தொடர்ச்சியான அயராத ஆதரவும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்திய திரை உலகின் மிகச்சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றாக மாற்றியது.


தனிப்பட்ட முறையிலும் உங்களது விருந்தினராக நான் உங்களுடன் தொடர்ந்து இணைந்திருந்தேன். பலவற்றை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நான் கற்றுக் கொண்டதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அனுபவத்திற்காக எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன்.


உங்களுக்கும், போட்டியாளர்களுக்கும், அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கடைசியாக விஜய் டிவியின் அருமையான அற்புதமான குழுவினருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். குழுவில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது நன்றிகள். இந்த ஷோவை மிகப்பெரிய வெற்றியாக்கியதில் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஷோ மேலும் வெற்றிபெறும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசனின் அறிவிப்பைப் பார்க்கும்போது அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு படங்களில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆனந்தம் தரும் செய்தியாகும். அதேசமயம், அவர் ராஜ்யசபா தேர்தலிலும் திமுக  கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ளார். அந்த வகையில் அரசியல் தலைவராக அவரது தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகியிருப்பதாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்