கமல்ஹாசன் பிறந்த நாள்.. அட்வான்ஸ் ட்ரீட்.. இன்று புது படத்தின்..  டைட்டில் அப்டேட்!

Nov 06, 2023,12:58 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: உலக நாயகன் கமலஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, கமல்ஹாசன் நடிக்கும் 234 வது படத்தின் டைட்டில்  வீடியோ நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு, அதாவது இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் கடந்த  ஆண்டு 2022 , ஜூன் 3ஆம் தேதி வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியன்-2 படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் . 


இந்நிலையில் நாளை கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு கமல் நடித்த புதுப்படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது. அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




இயக்குனர் மணிரத்தினம் 36 ஆண்டுகளுக்குப் பின் கமலுடன்  மீண்டும் இணைந்து புது படத்தை இயக்குகிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ரவி கே .சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல்

ஏ .ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.   சண்டைப் பயிற்சி அன்பறிவு மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த மெகா கூட்டணியில் இணைகிறார்கள்.


இன்று மாலை  படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வித்தியாசமான ஸ்டில்லுடன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஸ்டில் இப்போது வைரலாகியுள்ளது. ஸ்டில்லே இப்படி இருந்தால் டைட்டில் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாரதியாரின் பாடல் வரிகளும் இடம் பெற்றிருப்பதால் நிச்சயம் புரட்சிகரமான படமாக இது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!

news

மன ரீதியிலான பிரச்சனை... விரைவில் மீண்டு வருவேன்... நடிகை நஸ்ரியா!

news

இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு: நயினார் நகேந்திரன்!

news

இன்ஸ்டா ரீல்ஸால் மகள் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..வைரலாகும் வீடியோ..!

news

அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை... பாஜக தேசிய தலைமை விளக்கம்!

news

வெயிலுக்கு இதமான குல்பி.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம்...எதிர்க்கட்சிகள் கண்டனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்