- ஸ்வர்ணலட்சுமி
வாழ்க்கை என்னவென்று புரியாத காரணத்தால் தன்னுடைய அப்பா எடுத்த முடிவை ஏற்றுக் கொண்டு கல்வியை வேண்டாம் என்று சொல்லி விட்டு, கல்யாணத்தை தேர்வு செய்தாள் வசுமதி. கல்யாணமும் செவ்வனே முடிந்தது. அப்போது தங்கை சாருமதிக்கு எட்டு வயது. ஆனால் சாருமதி சிறு வயதாக இருந்ததால் அப்போது அவளால் எதையும் எதிர்த்து கேட்க முடியவில்லையே என அனுதினமும் மனதில் புழுங்கிக் கொண்டிருந்தாள்.
சாருமதி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் 500 க்கு 460 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியிலேயே இரண்டாம் இடம் பிடித்தாள். மிகவும் குலூகலமாக இருந்தார்கள். மருத்துவர் ஆக வேண்டும் என்பது சாருமதியின் சிறு வயது கனவு. அக்காவுக்கு தான் பாலிய விவாகம் நடந்து விட்டது. நாம் சாதிக்க வேண்டும் என விஷயம் மனதில் ஆழமாக ஊன்றியது. அந்த வைராக்கியத்துடன் பனிரெண்டாம் வகுப்பை முடித்தாள் சாருமதி.
அந்த சமயத்தில் மருத்துவம் படிப்பதற்கு நுழைவு தேர்வு எழுத வேண்டும். அந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் சாருமதியால் மருத்துவம் படிக்க முடியாமல் போனது. எனவே திருநெல்வேலியில் உள்ள கலைக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கலாம் என சாருமதியின் பெற்றோர் நினைத்திருந்தனர்.
அப்போது ராஜவேல், சாருமதியிடம், " என்னம்மா, கலைக் கல்லூரியில் பி.எஸ்சி,.,யில் சேர்ந்து படிக்கிறாயா?" என கேட்டார். அதோடு, படித்துக் கொண்டிருக்கும் போதே நல்ல வரன் வந்தால் திருமணம் செய்து கொடுத்து விடலாம் என்றும் வாசுகியிடமும் சொல்லி கொண்டிருந்தார் ராஜவேல். அதை சாருமதி கேட்டு விட்டாள். ஒரே மனக்குழப்பம் அவளுக்கு.
வீட்டில் இருந்து படித்தால், அக்காவை போல் நம்மையும் கல்யாணம் செய்து கொடுத்து விடுவார்கள் என நினைத்தாள் சாருமதி. அதனால் சென்னை தரமணியில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கிறேன் என அப்பாவிடம் சொல்லி விட்டாள் சாருமதி. அப்போதும் இரு பாலர் படிக்கும் கல்லூரியில் சேர்த்து விட அவளது அப்பாவிற்கு மனமில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என தனக்குள் இருந்த தீராத ஆசையின் காரணமாக ஆர்கிடெக்சுரல் அஸிஸ்டென்ட்ஷிப் படிப்பில் சேர்த்து விடு அப்பா என கேட்டாள் சாருமதி.
உடனே பெண் பிள்ளையை வெளியூர் அனுப்பி, ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க ராஜவேலுக்கு விருப்பம் இல்லை. இதனால் தன்னுடைய உடன்பிறந்தவர்கள், சாருமதியின் தாத்தா, பாட்டி என அனைவரும் வந்து வீட்டில் பஞ்சாயத்து நடந்தது. அதனையும் எதிர்த்து போராடிய சாருமதி, "நான் படித்தே தீருவேன்" என மனஉறுதியுடன் இருந்தாள். அவளுடைய பிடிவாதத்தை பார்த்து அவளுடைய அப்பா கல்லூரியில் சேர்த்து விட்டார். ஆனால் விதி வலியது.
அப்பாவிற்கு மூட்டு வலி வந்ததால், "என்னால் இப்போதே நடக்க முடியவில்லை. உனக்கு ஒரு நல்லது செய்து பார்க்க வேண்டும். நிறைய வரன் வந்து கொண்டிருக்கிறது. நல்ல வரன் வரும் போதே திருமணம் செய்வது தான் நல்லது. பிறகு நாமாக தேடினாலும் நல்ல வரன் அமையாது" என சாருமதியின் மனதை மாற்ற முயன்றார். ஒவ்வொரு முறை சாருமதி லீவுக்கு வீட்டுக்கு வரும் போது எல்லாம் இதே பாட்டு தான். அதனால் வேறு வழியில்லாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை சாருமதிக்கு. மூன்றரை ஆண்டு கால படிப்பை ஒன்றரை ஆண்டிலேயே கைவிட வேண்டிய நிலை வந்தது. இருந்தாலும் சாருமதி படிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்ததால், வீட்டில் இருந்தே படிக்கட்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் சேர்த்து படிக்க வைத்தனர்.
சாருமதி கல்லூரியில் சேர்ந்து படிக்க துவங்கிய முதல் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே, நல்ல வரன் வந்தது. இன்ஜினியரிங் பட்டதாரி மாப்பிள்ளை. அரசு வேலை. ஜாதகமும் பொருந்தி வந்ததால், திருமணம் யோகம் கூடி வந்து விட்டது என உடனடியாக திருமணத்தை பேசி ஏற்பாடு செய்து விட்டார் ராஜவேல். ஆனால் சாருமதியோ பெற்றோரின் விருப்பத்திற்காக கல்யாணம் செய்தாலும், கல்வியை தொடருவதில் உறுதியாக இருந்தாள். கருப்பு அங்கி போட்டு, பட்டத்தை கையில் வாங்கியே தீர வேண்டும் என்ற ஆழ்மனது ஆசையுடன் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டாள்.
சாருமதிக்கு வந்த வரன், அவளுடைய எண்ணத்திற்கு ஏற்க எண்ண அலைகள் இருந்ததால், "நான் உன்னை படிக்க வைக்கிறேன்" என உறுதி அளித்ததால் சந்தோஷத்துடன் கல்வியுடன், கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள் சாருமதி. ஆனால் அங்கும் விதி விளையாடியது. திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையையும் பார்த்துக் கொண்டு, எப்படி பல போராட்டங்களை தாண்டி சாருமதி பட்டம் பெற்றாள்..?
அடுத்த பாகத்தில் பார்க்கலாம்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பழம்பெரும் பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் காலமானார்.. கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரர்!
யுஜிசியின் விதிமுறைகள் மாற்றம்.. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.. சட்டசபையில் தீர்மானம்
ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பெருகும்.. குறையாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
பொங்கல் தொகுப்பு.. சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.. ஜன 13 வரை வாங்கலாம்
திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் வரலாறு காணாதது.. கைது செய்ய வேண்டும்.. ரோஜா ஆவேசம்
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்... எனவே.. நாளை ரேஷன் கடைகள் இயங்கும் மக்களே!
த.வெ.க. புதிய மாவட்ட நிர்வாகிகள் தயார்.. நாளை முதல் கூட்டம்.. யார் யாருக்கு பொறுப்பு?
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: சந்திரபாபு நாயுடு
வணங்கான் படத்தில் நடித்த பிறகுதான்.. என் மீது வெளிச்சமே விழுந்தது.. நாயகி ரோஷினி ஓபன் டாக்!
{{comments.comment}}