கதையல்ல நிஜம்... கல்வியா ? கல்யாணமா? .. short தொடர் கதை (பாகம் 1)

Jan 06, 2025,04:56 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருநெல்வேலியில் வாழ்ந்து வந்த நடுத்தர குடும்பம் அது. ராஜவேல்-வாசுகி தம்பதியருக்கு வசுமதி, சாருமதி என்ற  இரு மகள்கள். இருவரும் அப்படி ஒரு அழகு. வசுமதி, 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு படிப்பில் நாட்டம் இல்லை. 


"வசுமதி எழுந்திரு. மணி 6 ஆகி விட்டது. பத்தாம் வகுப்பு போர்டு எக்ஸாம் எழுதப் போகிறாய். இன்னும் உனக்கு படிக்க வேண்டும் என்ற பொறுப்பு வரவில்லையா?" என்று வசுமதியை அம்மா வாசுகி வசை பாடிக் கொண்டே இருப்பார். ஆனால் அம்மாவின் வார்த்தைக்கு பயந்து எழுந்து உட்கார்ந்தாலும் வசுமதியோ, போர்வைக்குள் படிப்பது போல் புத்தகத்தை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பாள். படிப்பதை விட, அந்த மாதிரி தூங்குவதில் அவளுக்கு அப்படி ஒரு சுகம். 


வசுமதிக்கு நேர் மாறாக அவள் தங்கை சாருமதியோ படிப்பில் படு சுட்டி.  ஆனால் அவளிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம், சாப்பாடு விஷயத்தில் அம்மாவை ஏமாற்றி ஏதாவது வாலுத்தனம் செய்து கொண்டே இருப்பாள். 


"அவளை படிக்க வைப்பதும், இவளை சாப்பிட வைப்பதுமே எனக்கு தினமும் பெரும் போராட்டமாக உள்ளது. தினமும் காலையில் எழுந்தது துவங்கி, இரவு வரை இதே போராட்டமாக இருக்கிறது" என வாசுகி புலம்பிக் கொண்டே இருப்பாள்.


படிப்பில் தான் ஆர்வமில்லை, சரி இசையாவது கற்றுக் கொள்ளட்டுமே என்று மகள் வசுமதிக்காக ராஜவேல் தனியாக பாட்டு வாத்தியார் ஒருவரை வீட்டிற்கே வந்து கற்றுத் தரும்படி ஏற்பாடு செய்தார். தினமும் மாலை 6 மணி ஆனதும் சரியாக வசுமதி வீட்டிற்கு சைக்கிளில் வந்து இறங்கி விடுவார் ஷண்முகம் வாத்தியார்.  ஆனால் அப்போதும் இசை வகுப்பை கட் அடிக்க தினமும் ஒரு காரணத்தை தயார் செய்து வைத்திருக்க துவங்கினாள் வசுமதி. 




ஷண்முகம் வாத்தியர் வருவதை பார்த்ததுமே தனது தங்கை சாருமதியிடம் ஓடிச் சென்று, "ஏய் சாரு, எனக்கு வயிறு வலிக்கிறது. இன்று எனக்கு பதில் நீ வகுப்பில் உட்காறேன்" என தங்கையிடம் சொல்லி விட்டு, அவளின் பதிலுக்காக கூட காத்திருக்காமல் அறைக்குள் சென்று புகுந்து கொள்வாள் வசுமதி. இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. அந்த சமயத்தில், டாக்டர் மாப்பிள்ளை வரன் ஒன்று வந்திருந்தது. வசுமதியை பெண் பார்க்க வருவதற்கு ஏற்பாடும் செய்ய துவங்கி விட்டார்கள். 


அந்த சமயத்தில் சொந்தம் விட்டுப் போய் விடக் கூடாது என நினைத்த ராஜவேலின் தாய் (வசுமதி, சாருமதியின் பாட்டி) தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்று, அவர்கள் குடும்பத்தினரை தாம்பூல தட்டுடன் பரிசம் போடுவதற்காக கையோடு மகன் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார்.


திடீரென வீட்டிற்கு தாம்பூல தட்டுடன் மகளை பெண் கேட்டு உறவினர்கள் வருவார்கள் என்பதை சற்றும் எதிர்பார்க்காத ராஜவேல், நிலைமையை சமாளிக்க, 


"பொண்ணு இப்போது தான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்..." என தயங்கி தயங்கி வார்த்தைகளை மென்று விழுங்கிக் கொண்டிருந்தார்.


மாப்பிள்ளையின் அப்பாவோ, " உங்கள் மகளை கண்டிப்பாக என்னுடைய மகனுக்கு நீங்கள் கொடுத்து தான் ஆக வேண்டும். சொந்தம் விட்டுப் போகக் கூடாது இல்லையா?" என பிடிவாதமாக கூறிக் கொண்டிருந்தார்.  


இதனால் சரி ஒரு முடிவுக்கு வந்த விடலாம் என நினைத்த ராஜவேல் மகள் வசுமதியிடமே சென்று,


"என்ன வசுமதி...மாமா வீட்டில் இருந்து உன்னை பெண் கேட்டு வந்திருக்கிறார்கள். இது உன்னுடைய வாழ்க்கை. உன்னுடைய விருப்பம் தான் இதில் முக்கியம். கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா? அல்லது கல்வியை தொடர்கிறாயா?" என்று கேட்டார்.


வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியாத பதினைந்து வயது பெண்ணான வசுமதியின் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஓடத் துவங்கியது. அதற்கு, கேள்வியும் நானே பதிலும் நானே என்பது போல் அவளே மனதிற்குள் பதிலும் கொடுத்துக் கொள்கிறாள்.


"இப்போது தான் பத்தாம் வகுப்பு படிக்கிறோம். ஆனால் இப்போதே தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல் என இவ்வளவு படிக்க வேண்டி உள்ளது. படித்த அனைத்தையும் மறக்காமல் நினைவில் வைத்து, தேர்வில் எழுதி, மதிப்பெண் வாங்கி பாஸ் ஆவதற்குள்ளாகவே.... அப்பாடா... நினைக்கும் போதே கண்ணை கட்டிக் கொண்டு வருகிறது. பதினொன்றாம் வகுப்பு இயற்பியல், வேதியியல், உயிரியல் என மூன்று தனித்தனியாக படிக்க வேண்டி வருமே. இது போக தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகியவற்றையும் படிக்க வேண்டி வருமே...அம்மாடியோவ்...இதெல்லாம் நம்மால் முடியாது. கஷ்டப்படாமல் இருப்பதற்கு கல்வி வேண்டாம். கல்யாணமே பண்ணிக் கொள்ளலாம்" என முடிவு எடுக்க தெரியாமல் முடிவு எடுத்து விட்டாள் வசுமதி. 


"உங்கள் விருப்பம் அப்பா" என சொல்லி தன்னுடைய வாழ்க்கையை அப்பாவின் கைகளில் ஒப்படைத்தாள் வசுமதி.


பத்தாம் வகுப்பு பரிட்சை முடிந்ததும் கல்யாணத்தை வைத்து விட்டார்கள். கல்யாணம் கோலாகலமாக நடந்தது.  கல்வியா? கல்யாணமா? என்ற கேள்விக்கு  கல்யாணமே படிப்பு கஷ்டத்தில் இருந்து விடுபட சரியான முடிவு என கல்யாணம் செய்து கொண்டாள் வசுமதி.


சற்று காலம் கழித்து இதே கல்வியா? கல்யாணமா? என்ற நிலை இரண்டாவது மகள் சாருமதியின் வாழ்க்கையிலும் வந்தது. சாருமதியும் ஒரு முடிவெடுத்தாள்.


ஆனால் அவள் என்ன முடிவு எடுத்தாள்? என்ன நடந்தது? அடுத்த பாகத்தில் பார்ப்போம். தொடர்ந்து பயணித்திருங்கள் தென்தமிழ் இணையதளத்துடன்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Erode East.. ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியா.. புறக்கணிப்பா.. ஜனவரி 11ல் முக்கிய முடிவு!

news

Erode East by election.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுக்கு சீட் தரப்படுமா.. காங். நிலை என்ன?

news

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : விஜய் கட்சியின் நிலைப்பாடு என்ன.. போட்டியிடுமா? போட்டியிடாதா?

news

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு... மதுரை தமுக்கத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த விவசாயிகள்!

news

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத் தேர்தல்.. அறிவித்தது தேர்தல் ஆணையம்

news

விடை பெற்றார் ஜஸ்டின்.. அடுத்த பிரதமர் யார்.. கனடாவை அடுத்து ஆளப் போவது ஒரு தமிழ்ப் பெண்?

news

துணைவேந்தர் நியமனம்.. யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவியைக் கண்டித்து.. திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு!

news

நேபாளத்தை உலுக்கிய 7.1 ரிக்டர் பூகம்பம்.. பலர் பலி.. டெல்லியும் ஆடியதால் மக்கள் அதிர்ச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்