புதிதாக 1.48 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. வந்தது செம அப்டேட்!

Jun 27, 2024,05:42 PM IST
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல்  மேல்முறையீடு செய்த 1.48லட்சம் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயடைந்து வருகின்றனர். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் புதிதாகக் கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்ந்து மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதி தமிழ்நாடு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், பயன்பெரும் மகளிர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில், சட்டசபையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையினர் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024-2025ம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தபின் 30 நாட்களுக்குள் இ சேவை மையம் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தபின் 30 நாட்களுக்குள் இ சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்