கத்தியுடன் மார்க்கெட்டில் மர்ம நபர் அட்ராசிட்டி.. சுட்டுப் பிடித்த போலீஸ்.. என்னாச்சு?

Feb 06, 2023,04:06 PM IST
கல்புர்கி, கர்நாடகா: கையில் கத்தியுடன் மார்க்கெட்டில் அட்ராசிட்டி செய்த மர்ம நபர் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கர்நாடக மாநிலம் கல்புர்கி நகரில் உள்ள பிஸியான மார்க்கெட் பகுதியில், ஒன்று நேற்று இரவு வழக்கமான நாள் போல் இயங்கி வந்தது. அப்போது "வாட்டசாட்டமான" மர்ம நபர் ஒருவர் கையில் இரு கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி அங்கு வந்தார்.

அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் பயந்து போன பொதுமக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு கையில் லத்தியுடன் விரைந்த போலீசார் முதலில் மர்ம நபரை சமாதானம் செய்ய முயற்சித்தனர். பொதுமக்களை அச்சுறுத்திய மர்ம நபர் போலீசாரையும் விடவில்லை. கையில் இருந்த கத்தியை வைத்து போலீசாரை நோக்கியும் தாக்குதல் நடத்த எத்தனிக்கவே போலீசார் விழிபிதுங்கி நின்றனர்.

இந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மர்ம நபரின் காலில் சுட மர்ம நபர் சுருண்டு கீழே விழுந்தார். பின் கீழே விழுந்த மர்ம நபரை போலீசார் லத்தியால் வெளுத்தெடுத்தனர். அதன் பின்னர் அந்த நபரை அங்கிருந்து கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சேத்தன் கூறுகையில், மார்க்கெட் பகுதியில் மர்ம நபர் கத்தியால் பொதுமக்களை தாக்கியுள்ளார், பொதுமக்கள் முயன்றும் அவனை பிடிக்க முடியவில்லை. பின் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாதுகாப்பு காரணமாக துப்பாக்கியால் சுட்டு பிடிக்கவேண்டியாயிற்று. அந்த நபரின் பெயர் ஜாபர். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்