சென்னை: டைமிங் பார்த்து ரைமிங்காக அடிப்பதில் நம்மவர்களுக்கு நிகர் நம்மவர்கள்தான். தகவல் பரிமாற்றக் களமாகத்தான் சோசியல் மீடியாக்கள் உருவாகின, அறிமுகமாகின. ஆனால் இன்று அவை எல்லாமே கலாய்ப்புக் களமாக மாறி விட்டன.. எதை எடுத்தாலும் அஞ்சு ரூபா என்று விற்பது போல, இங்கும் கூட எதை எடுத்தாலும் கலாய்க்கிறதுதான் வழக்கமாகி விட்டது.
அப்புறம் நாம மட்டும் சும்மா இருந்தா எப்படி.. நாமும் அதிலிருந்து நாலைந்து பிட்டுக்களை அள்ளி வந்திருக்கிறோம்.. உங்களையும் கலகலப்பாக சிரிக்க வைக்க.. படிச்சுப் பாருங்க.. சிரிப்பு வந்தா சிரிங்க... இல்லாட்டி better luck next time.. அப்படின்னு அடுத்த ஜோக்குக்காக வெயிட் பண்ணுங்க!
என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்க
ராஜா: என்னண்ணே.. பொண்ணு கேட்கப் போறேன்னு போனீங்க.. ரத்தக் காயத்தோட வர்றீங்க
காஜா: அட நீ வேற.. பொண்ணோட அப்பான்னு நினைச்சு, அவளோட புருஷன் கிட்ட போய் பொண்ணைக் கொடுன்னு கேட்டேன்.. அவன் "குடுத்து" அனுப்பிடடான்!
--
சோறு வடிச்ச பிறகு நான் ஏன்டா பூரி சுடணும்!
சமையல் குறிப்பு: சப்பாத்தி, பூரி போன்றவை சுடுவதற்கு முன்பு சோறு வடித்த கஞ்சியை மாவில் சேர்த்து பிசைந்தால் பூரியும், சப்பாத்தியும் சாஃப்ட்டாக வரும்.
சமையல் குறிப்பைப் படித்தவர்: அதான் சோறு ஆக்கிட்டோம்ல.. அப்புறம் எதுக்குடா நான் சப்பாத்தியும், பூரியும் சுடணும்!
--
நீ செஞ்ச பாவம் என்ன சொல்லு!
அவர்: ஏன் சார் என்னைக் கைது பண்ணீங்க
போலீஸ்: நீ பேசுனதுக்காக கைது பண்ணலை. போன பிறவில பாவம் செஞ்சவங்கதான் இந்த பிறவில கஷ்டப்படுவாங்கன்னு சொன்னீல.. இப்ப சொல்லு.. நீ போன பிறவில என்ன பாவம் பண்ண.. டெல் மீ??
--
அவன் ஜாலியா இருக்கான் சார்
புகார் கொடுக்க வந்தவர்: சார் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டி 3 மாசமா காணோம் சார்.
போலீஸ்காரர்: அந்தம்மா புருஷன்தானே புகார் கொடுக்கணும்.. நீ ஏன் கொடுக்கிறே
பு. கொ.வ. : சார் அவன் புகார் கொடுக்காம ஜாலியா சுத்திட்டு இருக்கான் சார்.. எனக்குப் பொறுக்கலை.. அதான் நான் வந்து கொடுக்கிறேன்!
--
அட கிறுக்குப் பயலே!
டெய்லி ஸ்விம்மிங் பண்ணா ஒல்லியா ஆகலாம்னு சொன்னாங்க .. சரிடா.. அப்புறம் ஏன் திமிங்கலம் குண்டா இருக்கு.. இதைக் கேட்டா நம்மள கிறுக்குப் பயன்னு சொல்றாய்ங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2025 தைப்பூச விரதம் : 21 நாள் முருகனுக்கு விரதம் இருக்கும் முறையும், எளிய வழிபாடும்
ஈரோடு கிழக்கு தொகுதி.. வேட்பு மனு பரிசீலனையில் குழப்பம்.. தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்
சவரன் ரூ.60,000த்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்
கத்தியால் குத்திய நபரை போராடி பாத்ரூமுக்குள் அடைத்து வைத்த சைப் அலிகான்.. தப்பியது எப்படி?
பெரியார் குறித்த பேச்சு.. சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்த பெரியாரிய அமைப்பினர்!
ஈரோடு கிழக்குத்.. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்.. யார் யாருக்கு என்ன சின்னம்?
கதையல்ல நிஜம்.. கல்வியா? கல்யாணமா? - Short தொடர் கதை.. பாகம் 3
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 22, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில்.. பிப்ரவரி 5 பொது விடுமுறை அறிவிப்பு
{{comments.comment}}