ஈரோடு இடைத் தேர்தல் முடியட்டும்.. "ஒரே ஒரு அதிமுக"தான் இருக்கும்.. கடம்பூர் ராஜு

Jan 22, 2023,11:15 AM IST

கோவில்பட்டி: ஈரோடு இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எந்த அணியும் இருக்காது. ஒரே அணிதான், எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மட்டுமே இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கடம்பூர் ராஜு பேசினா். அப்போது அவர் பேசுகையில், ஆயிரம் எதிரிகளைக் கூட எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் ஒரே ஒரு துரோகியை சமாளிப்பதுதான் சங்கடமானது. 

2021 சட்டசபைத் தேர்தலுக்கு ஒரே தலைமை என்ற முடிவை எடுத்தோம். ஆனால் அதை தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், எடப்பாடியார் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும்.

ஈரோடு இடைத் தேர்தல் பெரும் திருப்புமுனையாக இருக்கும். இந்தத் தேர்தல் முடியட்டும்.. அந்த அணி இந்த அணி என்று எந்த அணியும் பிறகு இருக்காது. ஒரே அணி, அது எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மட்டுமே இருக்கும் என்றார் கடம்பூர் ராஜு.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்