Kabosu.. உலக மீம்களின் செல்ல நாயகியாக வலம் வந்த கபோசு நாய் மரணமடைந்தது!

May 24, 2024,01:40 PM IST

டோக்கியோ: கபோசு நாய் காலமாகி விட்டது.. கபோசு நாய் என்று சொல்வதை விட "doge" மீம்களின் நாயகி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உலகப் புகழ்பெற்ற முகத்தைக் கொண்டது இந்த நாய்.


ஷிபு இனு ரக நாயான இதன் தோற்றத்தை வைத்துத்தான் ஷிபு இனு கிரிப்டோகாயின் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் இந்த நாயின் உருவத்தைப் பயன்படுத்தி பலரும் மீம்ஸ் போட்டு கலக்கி வந்தனர். அந்த அளவுக்குப் பிரபலமானது இந்த நாய். இடையில் கூட இந்த நாயின் முகத்தை தனது எக்ஸ் தளத்தின் லோகோவாக மாற்றி கலகலப்பை ஏற்படுத்தியிருந்தார் எலான் மஸ்க் என்பது நினைவிருக்கலாம். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கபோசு நாய் தற்போது இறந்து விட்டது. 




முதலில் "doge" மீம்ஸ் மூலமாக கபோசு நாய் பிரபலமானது. இதையடுத்தே இதை இன்ஸ்பிரேஷனாக வைத்து கிரிப்டோகாயின்கள் உருவாக்கப்பட்டன.  கிரிப்டோ கரன்சி துறையில் இந்த நாயை வைத்து ஏகப்பட்டது நடந்துள்ளது. ஜப்பானின் நரிடா நகரில்தான் கபோசு வசித்து வந்தது. அதன் இறுதிச் சடங்குகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக அதன் உரிமையாளர் அட்சுகோ சாடோ அறிவித்துள்ளார்.


மரணத்திற்கு முன்பு தனது தோளில் சாய்ந்து கபோசு படுத்துத் தூங்கியதாகவும், தூங்கப் போவதற்கு  முன்பு நிறைய தண்ணீர் குடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தூக்கத்திலேயே கபோசு உயிர் பிரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


கடந்த 2022ம் ஆண்டு கபோசுவுக்கு கல்லீரல் நோய் வந்திருப்பதும், லூக்கேமியா வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். கபோசுவின் உரிமையாளர் கூறுகையில், உலகிலேயே மிகவும் சந்தோஷமான நாய் கபோசுதான். இப்போது கூட அது தூங்குவது போல எங்களுக்கு அருகே படுத்துள்ளது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்