காணும் பொங்கல்.. இது அலையா இல்லை மக்கள் தலையா.. மெரீனா கடற்கரையை நிறைத்த கூட்டம்!

Jan 17, 2024,06:37 PM IST

சென்னை: தமிழகம் முழுவதிலும் மக்கள் இன்று காணும் பொங்கலை கோலாகலமாக கொண்டாடி மகிழந்தனர். தமிழ்நாட்டின் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக சென்னையில் கடற்கரைகள், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி மகிழ்ந்தனர். 


பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. வட மாவட்டங்களில்தான் இது வழக்கமாக பிரபலமாக இருக்கும். இப்போது தமிழ்நாடு முழுவதும் இதை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். 




காணும் பொங்கல் என்பது ஓய்வு மற்றும் மகிழ்ச்சியின் நாளாகும். இந்நாளில் மக்கள் குடும்பப் பயணங்கள் பிக்னிக், அண்டை வீட்டார் மற்றும் உறவினர் வீடுகளுக்கு செல்வது போன்றவற்றின் மூலம் தங்கள் நேரத்தை செலவிடுவதை குறிக்கிறது. குடும்ப உறவுகளை வலுப்படுத்த இந்த நாளை பலர் பயன்படுத்துகின்றனர். 


காணும் பொங்கலையொட்டி கோவில்கள், சுற்றுலாத்தலங்கள், கடற்கரைகள், பொது இடங்கள் என அநேக இடங்களில்  மக்கள் அதிகம் மாலை நேரங்களில் கூடி மகிழ்ந்தனர். உற்றார் உறவினர்கள், நண்பர்களோடு கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். 


சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். கடற்கரையில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடியும் , மணல் பரப்பில் வட்டமிட்டு அமர்ந்து பேசியும், உணவுகளை உண்டும் மகிழ்ந்தனர். பல்வேறு சுற்றுலா தலங்களிலும் மக்கள் குவிந்தனர். இதனால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.




வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் இன்று 25,000க்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர். இதனால் வண்டலூர் பூங்கா முழுவதும் மக்கள் தலையாக காணப்பட்டது.  காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பல்வேறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.


சென்னை மட்டுமல்லாமல் திருச்சி முக்கொம்பு, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகள், சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.. புதுச்சேரி கடற்கரை, கடலூர் சில்வர் பீச் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்