சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்கள் குடும்பம் குடும்பமாக கடற்கரைகள் பூங்காக்கள் சுற்றுலாத்தலங்கள் உறவினர்கள் வீடுகள் என சென்று தங்கள் பொழுதுகளை கழித்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. அங்கு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு சென்று, உண்டு, விளையாடி, கலந்து பேசி கலகலப்பாக காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழிப் பூங்கா, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் அதிகம் சென்று காணும் பொங்கலை சிறப்பித்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாட அரசு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுமார் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து 1500 ஊர்க்காவல் படையினரும் பணிபுரிந்து வருகின்றனர்.
உலகின் 2வது நீளமான கடற்கரையான, மெரினா கடற்கரையில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரள்வதால் அப்பகுதிகளில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மெரினா பீச்சில் குறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை காப்பாற்றுவதற்காகவும் நீச்சல் தெரிந்த வீரர்களும் தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்திலும் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். கடலில் குளிப்போர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அதேபோல கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பூங்கா, முட்டுக்காடு படகு குழாம், விஜிபி, எம்ஜிஎம் பொழுது போக்குப் பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
புதுச்சேரியிலும் மக்கள் அதிக அளவில் கூடி காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அங்கும் கடற்கரையில் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல அங்குள்ள படகு குழாமிலும் மக்கள் அதிகளவில் காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல திருச்சியில் முக்கொம்பு, குமரி முனை, ராமேஸ்வரம் என அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்
மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு
Valentine's day: உங்களோட X-ஐ கடுப்பாக்கணுமா.. காத்திருக்கும் கரப்பான் பூச்சிகள்.. அமெரிக்காவில் கலகல
மதுரை.. இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு எதிரொலி.. போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம்!
சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டேவுக்கு கை கொடுத்த ராபின் சர்மா..தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திமுக
{{comments.comment}}