- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
காலத்தின் குரலினை கூர்ந்து கேளுங்கள்..!!
முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் அன்று.!!
முனிவர்களாய் முழுவேஷம் போடுவோர் இன்று..!!
மண்ணை உரமாக்கும் மண்புழுக்கள் அன்று..!!
மண்ணை விஷமாக்கும் நெகிழிகள் இன்று..!!
குடும்பத்தில் பத்துக்குமேல் குழந்தைகள் அன்று..!!
குடும்பத்தில் குழந்தைக்கே வழியில்லை இன்று..!!
எங்கும் கருத்தடை மையங்கள் அன்று ..!!
எங்கும் கருத்தரிப்பு மையங்கள் இன்று..!!
தூயநீரும், தூயகாற்றும் இலவசம் அன்று ..!!
இரண்டுக்கும் விலையோ விலை இன்று.!!
இயற்கையில் விளைந்த காய்கறிகள் அன்று..!!
இரசாயன கலப்பினக் காய்கறிகளே இன்று...!!
தெருவிற்கு ஒரு தொலைபேசி சாவடி அன்று ..!!.
ஒருவருக்கு ஒரு அலைப்பேசி இன்று..!!
அன்றும்... இன்றும்...!!
பெண் தெய்வமானாலும் அவள் கருவறையில்..!!
பெண்ணிற்கு பூசாரியாய் ஆள உரிமையுண்டோ..?
அன்றில் இருந்து , இன்று வரை,
பரத்தையர், வேசி, விபச்சாரி என்ற
பெண்பால் சொல்லுக்கு எதிர்ப்பாற்சொல்
உலக அகராதியில் உண்டோ..?
அன்றில் இருந்து, இன்று வரை
விதவை, வாழாவெட்டி , மலடி..!! என்ற ,
பெண்ணைக் குறிக்கும் அகராதிச் சொற்கள் ..!!
நவீன யுகத்திலும் அறத்தமிழ் அகராதியில் ,
நீக்கப்படாதது ஏனோ..?
இந்த காலத்தின் குரல் கேட்கிறதா..??
இனி நல்லதே நடக்கும் அன்றோ..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
{{comments.comment}}