சென்னை : சினிமாக்களில் பெண்களை கண்ணியமாக காட்டுங்க. ஹீரோவிற்கு கொடுப்பதை போல் அவர்கள் கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுங்க என தமிழ் சினிமா டைரக்டர்களை ஜோதிகா கேட்டுக் கொண்ட விஷயம் இப்போது வரை ஒர்க் அவுட் ஆக துவங்கி உள்ளது.
2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் ஜோதிகா. அஜித் நடித்த வாலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு தலை காட்டி விட்டு சென்ற ஜோதிகா, பிறகு டாப் ஹீரோயினாகி ஹீரோக்களுக்கே டஃப் கொடுப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, விக்ரம் என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. கடைசியாக ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து, அந்த படத்தில் தன்னை பற்றியே அனைவரும் பேசும் படி வைத்தார்.
சினிமாவில் படு பிஸியாக நடித்த காலத்திலேயே நடிகர் சூர்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி, குடும்பத்தில் கவனம் செலுத்த துவங்கினார். திருமணம் செய்து கொண்டதால் 2009 ம் ஆண்டு மலையாளத்தில் சீதா கல்யாணம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஆனாலும் தான் திறமையான நடிகை என்பதை நிரூபிக்கும் விதமாக இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் ஃபிட்னசில் கவனம் செலுத்தி, கிடைத்த கேப்பில் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.
2015 ம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் மிகப் பெரிய ஒரு கம்பேக் கொடுத்தார். அதுவரை ஹீரோயின் அடையாளத்துடன் ரசிகர்கள் மத்தியில் வலம் வந்த ஜோதிகா, அதற்கு பிறகு பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்களில் மட்டுமே நடித்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். சோஷியல் மீடியாவிலும் பிஸியான ஜோதிகா, தான் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இப்படி கூட ஒர்க் அவுட் பண்ண முடியுமா? வழக்கமாக சூர்யா தான் இப்படி எல்லாம் படங்களுக்காக மெக்கெடுவார். ஆனால் இவர் அவரையே மிஞ்சி விட்டாரே என அனைவரும் வாயை பிளக்க வைத்தார் ஜோதிகா.
திறமையான நடிகையாக மட்டுமின்றி தன்னை பொறுப்பான பெண்ணாகவும் அடையாளப்படுத்தினார் ஜோதிகா. தான் நடித்த ராட்சசி, பொன்மகள் வந்தாள் படங்களின் ப்ரொமோஷன் விழாக்களில் பேசும் போது, பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் டைரக்டர்களிடம் ஒன்றை கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து பெண் கேரக்டர்களை உங்களின் படங்களில் கண்ணியமாக காட்டுங்கள். உங்களின் அம்மா, மனைவி, சகோதர் அல்லது காதலி மற்றும் நிஜ வாழ்க்கையில் உங்களைச் சுற்றி வாழும் பெண்களை பாருங்கள். பெரிய ஹீரோக்களுக்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
உங்களுக்கு சமூக பொறுப்பு உள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என அனைவருக்கும் தெரியும். இளைஞர்களிடம் சினிமா மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இனியும் ஏற்படுத்தக் கூடியது. அதனால் தயவு செய்து பெண்களுக்கு புத்திசாலித்தனமான கேரக்டர்களை கொடுங்கள். கண்ணியமாக காட்டுங்கள். நகைச்சுவைக்காக கூட நம்மை சுற்றி இருக்கும் பெண்களை இரட்டை அர்த்த வசனங்களில் குறிப்பிடாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேடையில் டைரக்டர்களிடம் ஓப்பனாக கேட்டது மட்டுமல்ல, தனியாக அவர் அளித்த பேட்டியிலும் இதையே தெரிவித்தார். தான் நடிக்கும் படங்களின் கேரக்டர்கள் பற்றி பேசிய ஜோதிகா, நிஜ வாழ்க்கையில் பெண்கள் பலவிதமான பிரச்சனைகள், சவால்களை சந்திக்கிறார்கள். அதனால் மனஅழுத்தம் ஏற்பட்டால் அதற்காக அவர்கள் குடிப்பது கிடையாது. எந்த பிரச்சனை, சவாலாக இருந்தாலும் துணிந்து ஏற்கிறார்கள். அதை எதிர்கொள்கிறார்கள். பொறுப்பை எடுத்துக் கொண்டு, அதிலிருந்து வெளி வருகிறார்கள்.யகடந்து செல்கிறார்கள். அவர்கள் மனதளவில் வலிமையானவர்கள். அப்படி இருக்கும் போது திரையில் மட்டும் எதற்காக அவர்களை முட்டாள்களாக காட்ட வேண்டும்.
இது தான் பெண்களை புத்திசாலிகளாக காட்ட வேண்டும் என நான் சொல்வது. சும்மா ஹீரோவுக்கு பக்கத்தில் நின்று விட்டு போகவோ, பாட்டு, சில சீன்களுக்க மட்டும் வந்து போகவோ, அவரை புகழ்ந்து பேசும் நடிகையாகவோ இருக்க நான் விரும்பவில்லை. எனக்கு படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கும், 5 சீன்களின் நடிக்க வைத்ததற்கும் நன்றி என சொல்லி விட்டு போக என்னால் முடியாது. அது போலவும் நான் செய்ய மாட்டேன் என்றார்.
ஜோதிகா தற்போதும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக காதல், இந்தியில் ஸ்ரீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். நாமும் வாழ்த்துவோம் அவரை...ஹேப்பி பர்த் டே ஜோ...!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!
{{comments.comment}}