உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு

Apr 16, 2025,06:49 PM IST

டெல்லி: நீதியரசர் பூஷன் ராமகிருஷ்ண கவாய்  மே 14-ம் தேதி இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். 


தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மே 13-ம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதி கவாய் நவம்பர் மாதம் ஓய்வு பெற இருப்பதால், சுமார் ஆறு மாதங்கள் தலைமை நீதிபதியாக இருப்பார். 


நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, இந்த பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் என்ற பெருமையைப் பெறுகிறார் நீதிபதி கவாய். தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி கவாயின் பெயரை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார்.


ஓய்வு பெறும் தலைமை நீதிபதி தனக்கு அடுத்து வருபவரின் பெயரை சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரைப்பது வழக்கம். அதன்படி, சஞ்சீவ் கண்ணா, கவாயின் பெயரை பரிந்துரைத்துள்ளார். நீதிபதி கவாய் மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்தவர்.  1985-ல் பார் கவுன்சிலில் சேர்ந்தார். ராஜா போன்சலேவுடன் பணியாற்றினார். ராஜா போன்சலே, மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் மற்றும் நீதிபதி ஆவார்.




1987 முதல் 1990 வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பிறகு, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் பணியாற்றினார். 1992 ஆகஸ்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். 2000-ல் நாக்பூர் கிளையின் அரசு வழக்கறிஞராகவும், பொது வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார்.


நீதிபதி கவாய் 2003-ல் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005-ல் நிரந்தர நீதிபதியானார். 2019-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி கவாய் பல முக்கியமான தீர்ப்புகளைக் கொடுத்துள்ளார். 2016-ல் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு அவற்றில் ஒன்று. மேலும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவித்த பெஞ்ச்சிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்