- மீனா
சென்னை: ஒருத்தர் எப்பப் பார்த்தாலும் டென்ஷனாவே இருந்தார். டாக்டரிடம் போனார்.. எனக்கு டென்ஷன் தொல்லை தாங்க முடியலை சார்னு சொன்னார்.. அதுக்கு உங்களுக்கு எத்தனை பசங்கன்னு டாக்டர் கேட்டார்.. ஒரு பையன்தான்னு சொன்னார் அவர்.. இல்லையே இப்பத்தானே "டென் சன்"னு சொன்னீங்க என்று டபாய்த்தார் டாக்டர்.. நோயுடன் வந்தவர் கபகபவென சிரித்து விட்டு ஃபீஸ் கூட கொடுக்காமல் அந்த இடத்தை விட்டுக் கிளம்பிச் சென்றார்.
இதுல இருந்து என்ன தெரியுதுன்னா.. ஒன்னுமே கிடையாதுங்க.. ஜாலியா சிரிங்க.. இல்லாட்டி நாலு பேரை சிரிக்க வைங்க.. அவங்களும் நல்லா இருப்பாங்க.. நீங்களும் ஜிலுஜிலுன்னு இருப்பீங்க.. வாங்க வாய் வலிக்க சிரிக்கும்படியாக நாலு ஜோக்ஸைப் பார்த்துட்டு வருவோம்.
"அழுகாம" பாத்துக்கடா மவனே!
ஒருத்தனை அவங்க அப்பா பழக்கடையை பத்திரமா பார்த்துக்கிற சொல்லி இருக்காரு.
ஆனா அந்தப் பையன் தனியாக உட்கார்ந்து ஜோக் ஜோக்கா சொல்லிக்கிட்டு இருக்கான்
ஏன் தெரியுமா?
ஏனாம்
நகைச்சுவையைக் கேட்டு பழங்கள் எல்லாம் சிரிக்கிறதுக்கு.
அது எதுக்கு..!
ஏன்னா, அவங்க அப்பா எந்த பழமும் "அழுகாமல்" பார்த்துக்க சொல்லி இருக்காராம்.
--
அட குரங்கே...!
ஆசிரியர்: இன்னைக்கு குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று நான் நடத்தின பாடம் உங்களுக்கு எல்லாம் புரிஞ்சுதா
மாணவி: எங்களுக்கு புரிகிறது டீச்சர்
மாணவன்: ஒரே ஒரு சந்தேகம் இருக்கு டீச்சர்
ஆசிரியர்: என்ன சந்தேகம் கேளு
மாணவன்: குனிந்த குரங்கிலிருந்து நிமிர்ந்த குரங்கு வரை எல்லாம் அந்த மனுஷன் பின்னாடியே எதுக்கு போகுது டீச்சர் அதுதான் புரியல.
ஆசிரியர்: அடப்பாவி அதுதாண்டா பாடமே!
--
2 நாள் லீவு கொடுங்க சார்
ஊழியர்: சார் எனக்கு ரெண்டு நாள் லீவு வேணும்.
ஆபிஸர்: எதுக்கு?
ஊழியர்: இஸ்ரேல் பாலஸ்தீனவிற்கிடையே சண்டை நடக்குது இல்ல சார் அதனால தான்.
ஆபீஸர்: அதுக்கு உங்களுக்கு எதுக்கு லீவு
ஊழியர்: நீங்க தானே சார் சொன்னீங்க வீட்ல நடக்கிற சின்ன சின்ன சண்டைக்கு எல்லாம் லீவு கேட்க கூடாதுன்னு அதனாலதான் சார்.
ஆபிசர்: 😯
--
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
மகன்: அம்மா நான் துபாய்க்கு கிளம்புறேன்
அம்மா: பத்திரமா போயிட்டு வாப்பா வரும்போது துபாய் "ஷேக்"காதான் நீ திரும்ப வரணும்.
(பையன் கிளம்பி போன பிறகு)
அப்பா: பிள்ளை ரொம்ப தூரம் போறான். அவனுடைய போட்டோ ஏதாவது எடுத்து வச்சிருக்கலாம்ல்ல.
அம்மா: நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு தெரியும். என்னை பாசம் இல்லாதவன்னு நினைச்சீங்களா. இந்தா பாருங்க அவன் நம்மளுக்காகவே ஒரு புக்ல போட்டோவ ஒட்டி வைத்திருக்கிறான் போல அதை நான் எடுத்து வச்சிருக்கேன் பாருங்க
அப்பா : அடிப்பாவி அது தாண்டி பாஸ்போர்ட். அது இல்லையென்றால் உன் மகன் துபாய்க்கு போக முடியாதுடி
அம்மா: ஐயையோ
--
உன்னை மாதிரியே ஒரு லேடி!
கணவர்: உன்ன மாதிரியே இன்னைக்கு ஒரு லேடிய பார்த்தேன்
மனைவி: எப்ப பாத்தீங்க
கணவன்: வேலை விஷயமா வெளிய போகும்போது
மனைவி: நீங்க பார்த்த லேடி அழகா இருந்துச்சா
கணவன்: அது உன்ன மாதிரி தானே அதனால உன் அளவுக்கு இல்லம்மா
மனைவி: எதுல அழகுலையா, இல்லேன்னா அழகு குறைச்சலிலா
கணவன்: கண்டிப்பா அழகுலதான்
மனைவி: அப்புறம், என்ன மாதிரின்னு சொன்னீங்க.
கணவன்:உயிரே எப்படியாவது தப்பிச்சு ஓடிவிடு 😟
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}