- மீனா
சிலரைப் பார்த்தால் இறுக்கமா, உம்முன்னு இருப்பாங்க.. சில பேர் எப்பப் பார்த்தாலும் சிரிச்ச முகமாகவே இருப்பாங்க.. அவங்கதாங்க லக்கியான மனிதர்கள். சிரிச்சா நம் தசைகளுக்கு ரொம்ப நல்லதாம். இது சயின்ஸ்.. அது மட்டும் இல்ல நாம் இளமையாக இருக்கிறதுக்கு இது ஒரு விலையில்லா மருந்தும் கூட.
வாய்விட்டு சிரித்தால் நோய் எல்லாம் நம்மளுக்கு டாட்டா கட்டிவிட்டு சென்றுவிடும். இவ்வளவு நன்மைகள் நமக்கு இருக்கும்போது, அப்புறம் எதுக்கு பாஸ் சிரிக்காம இருக்கீங்க. ஜோக்ஸை நான் சொல்றேன்.. அதுக்கான மார்க்ஸை நீங்க போடுங்க.. வாங்க சிரிக்கலாம்...!
மலர்: என்ன இருந்தாலும் உன் கணவர் மேல உனக்கு இவ்வளவு சந்தேக புத்தி இருக்கக் கூடாது டி.
முல்லை: யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்குற? என் புருஷன் ராமன் டி. என் குல தெய்வம். அவரை போய் நான் சந்தேகப்படுவேனா.
மலர்: அப்புறம் எதுக்கு உன் வீட்டு வேலைக்காரப் பொண்ணு வேலைக்கு வரலைன்னு சொன்ன உடனே, உன் கணவரையும் ஆபீசுக்கு லீவு போட சொல்லிட்ட. ஏன் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளியில் எங்கேயாவது போயிருவாங்கன்னு பயந்துட்டியா?
முல்லை: ஐயோ! அப்படியெல்லாம் இல்லடி, அவரும் ஆபீஸ் போயிட்டா, வீட்டு வேலையெல்லாம் யார் பார்க்கிறது அதுக்கு தான் லீவு போட சொன்னேன்.
மலர்: அடடா!
--
மனைவி: உங்க பிரண்டுக்கு என்ன டேஸ்ட்டோ இந்த பொண்ண போய் புடிச்சிருக்குன்னு சொல்றாரு.
கணவன்: ஏன், இந்த பொண்ணுக்கு என்ன நல்லா தானே இருக்குது.
மனைவி: இந்த பொண்ணோட முகத்தையும், அது பேசுற விதத்தையும் பார்த்தா நல்லாவே இல்ல. அதனால தான் சொன்னேன் உங்க பிரண்டு கிட்ட சொல்லி வேற பொண்ணை பார்க்க சொல்லுங்க.
கணவன்: நான் எதுக்கு அவனுக்கு சொல்லணும்? நான் பொண்ணு பாக்க போனப்போ, அவன் மட்டும் எனக்கு சொன்னானா? அவனும் அனுபவிக்கட்டும்.
மனைவி: @@@@@@@@
--
கணவன்: நான் செத்தா நேரடியா சொர்க்கத்துக்கு போயிடுவேன்.
மனைவி: அங்க யாரெல்லாம் இருப்பாங்க மாமா?
கணவன்: அங்க ரம்பை, மேனகை, ஊர்வசி, போன்ற தேவதைகள் எல்லாரும் இருப்பாங்க, நான் அவங்க கூட ஜாலியா டான்ஸ் ஆடுவேன்.
மனைவி: அப்ப நான் செத்தா எங்க போவேன்?
கணவன்: நீ நரகத்துக்கு தான் போவ.
மனைவி: அங்க யாரெல்லாம் இருப்பாங்க மாமா.
கணவன்: அங்க கொரில்லா குரங்கு எல்லாம் இருக்கும் அது கூட தான் நீ டான்ஸ் ஆடனும்.
மனைவி: போங்க மாமா, உங்களுக்கு மட்டும் பூமியிலயும் அழகி, சொர்க்கத்திலும் அழகி. எனக்கு மட்டும் அங்கேயும் குரங்கு இங்கேயும் குரங்கா..!
கணவன்:????
--
கணவன்: கடவுளிடம் என்ன வேண்டிகிட்ட?.
மனைவி : இது எனக்கு முதல் ஜென்மமா இருந்தா இன்னும் ஆறு ஜென்மத்துக்கும் இவரே என் கணவரா அமையணும்னு வேண்டிக்கிட்டேன். ஆமா நீங்க என்ன வேண்டிக்கிட்டீங்க.
கணவன்: எனக்குன்னு நீ எதுவும் தர வேணாம். அதே மாதிரி என் மனைவி எது கேட்டாலும் தந்துராத என்னால தாங்க முடியல இந்த வாழ்க்கைய, அப்படின்னு வேண்டிக்கிட்டேன்
மனைவி: அய்யய்யோ! அதோடு சேர்த்து இனிமேலாவது என் கணவருக்கு நான் புடிச்ச மாதிரி நடந்துக்கணும்னு சேர்த்து வேண்டிக்கிட்டேனே.
கணவன்: வட போச்சே!!
{{comments.comment}}