Delimitation: அழைத்தது தமிழ்நாடு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்.. சென்னையில் திரண்ட தலைவர்கள்!

Mar 22, 2025,05:05 PM IST

சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறவுள்ளது.


மக்கள்தொகை அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளை சீரமைப்பு செய்தால் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆக குறையக்கூடும். அதனால் தொகுதி மறுசீரமைப்பை மேலும் 30 வருடங்களுக்கு நீட்டி வைக்க மத்திய அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது திமுக அரசு. இந்திய அளவில் தொகுதிகள் குறையக் கூடும் என்று கருதப்படும் 7 மாநிலத்  தலைவர்களுக்கு இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார்.


மேலும் கடந்த மார்ச் ஐந்தாம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு அவர்கள் முன்னிலையில் இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய  மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக எதிர்க்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கூட்டுக்குழு நடவடிக்கை குழுவை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




இதனை அடுத்து தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இக்கடிதத்தினை அமைச்சர் மற்றும் எம்.பி கொண்ட குழுக்கள் நேரடியாக சென்று முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்தனர். 


இதன் அடிப்படையில் இன்று முதல் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டுக்குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிஐ சோழா நட்சத்திர விடுதியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. இதில் கேரள முதல்வர் பிரனாயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவக்குமார் மற்றும், பி.ஆர். எஸ் தலைவர் ராமா ராவ், சிரோமணி அகாலிதளம் சார்பில் பல்விந்தர் சிங், பிஜூ ஜனதா தளம் சார்பில் சஞ்சய் குமார் தாஸ்  உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி சார்பிலும் ஒரு பிரதிநிதி வருகிறார்.


தாய்மொழியில் பெயர்கள்


இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் தலைவர்கள் அமரும் இருக்கைகளுக்கு முன்பு அவரவர் தாய் மொழி மற்றும் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொருவரின் தாய் மொழிக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இது பலரையும் கவரும் வகையில் உள்ளது.


விருந்தினர்களுக்கு வித்தியாசமான பரிசு


மாநாட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு வித்தியாசமான பரிசும் காத்திருக்கிறது. அதாவது தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் சிறப்பு வாய்ந்த பொருட்களை பரிசாக கொடுக்கவுள்ளனர்.


பத்தமடை பாய்,

தோடர்களின் சால்வை,

காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை,

ஊட்டி வர்க்கி,

கன்னியாகுமரி கிராம்பு,

கோவில்பட்டி கடலை மிட்டாய்,

ஈரோடு மஞ்சள்,

கொடைக்கானல் பூண்டு - ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டன. இந்தப் பபரிசுப் பெட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலினே ஒவ்வொருவருக்கும் அவரவர் இருக்கைக்கே போய் கொடுத்து பொன்னாடையும் போர்த்திக் கெளரவித்தார்.


முதல்வர் கொடுத்த வரவேற்பு


முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பொன்னாடை போர்த்தினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்