செஞ்சி ராமச்சந்திரன் த.வெ.கவில் இணையப் போறேன்னு சொன்னாரா.. அது வதந்தி.. எடப்பாடி பழனிச்சாமி

Sep 09, 2024,06:21 PM IST

சென்னை:   அதிமுக அமைப்புச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக சொன்னாரா.. அது வதந்தி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை கட்சியின் அவைத் தலைவராக்க விஜய் விரும்புவதாகவும், இதுதொடர்பாக அவரிடம் பேசப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.




செஞ்சி ராமச்சந்திரன் திமுக, மதிமுக என கட்சிகளில் இருந்து தற்போது அதிமுகவில் இருக்கிறார். ஆனால் ஆக்டிவான அரசியல் செயல்பாடுகளில் அவர் இல்லை. முன்னாள் மத்திய அமைச்சரான செஞ்சி ராமச்சந்திரன் மூத்த திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவர் ஆவார்.


இந்த நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் சேரப் போவதாக செய்திகள் வந்துள்ளதே என்று செய்தியாளர்கள் இன்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டனர். அப்போது அவர் பதிலளிக்கையில், யார் அவர் சொன்னாரா .. என் கிட்ட சொல்லலியே.. அதாவது அதிமுக என்பது ஒரு கடல். அவர் போல ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இது வலிமையான இயக்கம். 30 வருடம் ஆட்சியில் இருந்த கட்சி, பொன் விழா கண்ட கட்சி. சும்மா வேண்டும் என்றே ஊடகங்களில் வதந்தி கிளப்புகிறார்கள் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்