வாஷிங்டன்: காஸாவை இஸ்ரேல் நீண்ட காலம் ஆக்கிரமித்திருப்பது தவறாகி விடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் செல்லவும் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரமாகி வருகிறது. காஸாவை மட்டுமல்லாமல் மொத்த பாலஸ்தீனத்தையும் அழித்தொழிக்கும் முடிவில் அது இருப்பதாக அஞ்சப்படுகிறது. அந்த அளவுக்கு அது வெறித்தனமான தாக்குதலை காஸா மீது நடத்தி வருகிறது. வடக்கு காஸா முழுமையாக சேதமடைந்து போய் விட்டது. அங்குள்ள அடிப்படைக் கட்டமைப்புகள், வீடுகள் என எல்லாமே நிர்மூலமாக்கப்பட்டு விட்டன. அதை மீட்டெடுக்க பல வருடங்களாகும்.
ஆயிரக்கணக்கானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்னும் கட்டட இடிபாடுகளை எல்லாம் எடுத்தால் மேலும் பல ஆயிரம் பேரின் பிணங்கள் கிடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் காஸாவைக் கைப்பற்ற அது நினைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாலஸ்தீன மக்களுக்காக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான அமெரிக்கா இதைப் பார்த்து சுதாரிக்க ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலுக்கு திடீரென அறிவுரை கூற ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு சில அறிவுறுத்தல்களை விட ஆரம்பித்துள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு நேரில் போய் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவையும் நேரில் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பிடன் கூறியிருப்பதாவது:
போர் விதிகளை மீறாமல் இஸ்ரேல் நடந்து கொள்ளும் என்று நம்புகிறோம். அப்பாவி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உணவு, மருந்து, தண்ணீர் போன்றவை கிடைக்க வகை செய்ய வேண்டும். இஸ்ரேல் நீண்ட காலம் காஸாவை ஆக்கிரமித்திருக்க முடியாது. அது தவறாகப் போய் விடும். காஸாவை பாலஸ்தீன நிர்வாகமே கட்டுப்படுத்த வேண்டும். பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டிலேயே காஸா இருக்க வேண்டும்.
மாறாக, அதை இஸ்ரேல் நீண்ட காலம் கட்டுப்படுத்த முயன்றால் அது மிகப் பெரிய தவறாகி விடும். என்னைப் பொறுத்தவரை பாலஸ்தீன மக்களுக்கு, காஸா மக்களுக்கு ஹமாஸ் நிச்சயம் பிரதிநிதியாக இருக்க முடியாது. அப்பாவி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட ஹமாஸ் காரணமாகி விட்டது. எனவே அது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது என்றார் பிடன்.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கு வருமாறு அதன் பிரதமர், பிடனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பிடன் செல்வார் என்று தெரிகிறது. இருப்பினும் இதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை. சர்ப்பிரைஸாக பிடனின் இஸ்ரேல் பயணம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
{{comments.comment}}