TANGEDCO: நீங்க டிப்ளமோ படித்தவரா? அரசு வேலைக்கு செல்ல ஆசையா.. அப்ப இந்த நியூஸ் உங்களுக்குத்தான்!

Jul 05, 2024,05:49 PM IST

சென்னை:   தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகம் (டான்ஜெட்கோ) டெக்னீசியன் எலக்ட்ரீசியன் உள்ளிட்ட 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் காலி பணியிடங்களை நிரப்ப  வரும் 10.7.24 முதல் 31.7.24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.


தமிழ்நாடு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. அதேபோல் மின்சாரத்தை மின்கடத்திகள் வழியாக கொண்டு சென்று விநியோகம் செய்யும் பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தையும் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு  முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகம் சார்பில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.




தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் - tangedco) சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 395, எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 22, எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட்டேசன் இன்ஜினியரிங் 9, தகவல் தொழில்நுட்பம் 9, சிவில் இன்ஜினியரிங் 15, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 50, என மொத்தம்  500 காலி பணியிடங்கள் உள்ளன. 


இந்தக் காலி பணியிடங்களை நிரப்ப  வரும் 10.7.24 முதல் 31.7.24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.  தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 8000 வழங்கப்படும்.


கல்வித் தகுதி:


மேற்கண்ட பணிகளுக்கு மாநில அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கல்வி டிப்ளமோ படிப்பில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏதேனும் ஒன்றில் முழு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் www.tangedco.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். 


குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும். apprenticeships பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்