மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி.. குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார்.. நடிகர் ஜெயம் ரவி

Sep 10, 2024,06:10 PM IST

சென்னை:   நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.


தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் ஏன் இவருக்கு மிகப்பெரிய இடத்தை உருவாக்கித் தந்தது. இதனை தொடர்ந்து இவரின் அண்ணனான மோகன் ராஜாவின் இயக்கத்தில் பல வெற்றி படங்களை நடித்து பிரபலமானார். ஜெயம் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டைப் பெற்றார்.




இதற்கிடையே  ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான  ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆரவ் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் நிறைவடைந்து உள்ளன. இந்த நிலையில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக  மனைவியிடம் இருந்து பிரிவதாகவும், எனது தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பு அளிக்குமாறும் நடிகர் ஜெயம் ரவி நேற்று அறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.


நேற்று பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி, இன்று தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்  முறைப்படி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணை வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதில் 2009ம் ஆண்டு  நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும், மனைவி ஆர்த்தியிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் ஜெயம் ரவி கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்