நம்பர் 1 நிரந்தரமல்ல.. 2வது இடத்திற்குத் தள்ளப்பட்ட மஸ்க்.. முதலிடத்தில் பெஜாஸ்.. அப்ப அம்பானி?

Mar 05, 2024,06:08 PM IST

லண்டன்: உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வந்த எலான் மஸ்க், 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த 9 மாதங்களில் முதல் முறையாக அவர் முதலிடத்தை இழந்துள்ளார். முதலிடத்திற்கு அமேஸான் நிறுவன அதிபர் ஜெப் பெஜாஸ் முன்னேறியுள்ளார்.


ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் திங்கள்கிழமையன்று 7.2 சதவீத சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்து அவர் 2வது இடத்திற்குப் போய் விட்டார். மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 197.7 பில்லியன் டாலர்கள் ஆகும். பெஜாஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் டாலர்கள்.




2021ம் ஆண்டிலிருந்து ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்காமல் இருந்து வந்தார் பெஜாஸ். இப்போதுதான் முதல் முறையாக முதலிடத்திற்கு அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர்தான் பெஜாஸ்.


ப்ளூம்பெர்க் பட்டியலில் 197 பில்லியன் டாலர்  சொத்துக்களுடன் பெர்னார்ட் அர்னால்ட் 3வது இடத்தில் இருக்கிறார். டெஸ்லாவுக்கு தொடர் சரிவு ஏற்பட்டால் இவர் எலான் மஸ்க்கை முந்தி 2வது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. 4வது இடத்தில் மார்க் ஜக்கர்பர்க் 179 பில்லியன் டாலருடன் இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் 5வது இடத்தில் இருக்கிறார்.


முகேஷ் அம்பானி 11  - அதானி 12  - ஷிவ் நாடார் 37




இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி இந்த வரிசையில் 11வது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 115 பில்லியன் டாலர்கள் ஆகும். அவருக்கு அடுத்து அதாவது 12வது இடத்தில் கெளதம் அதானி 104 பில்லியன் டாலர் மதிப்புடன் இருக்கிறார்.


டாப் 20 பட்டியலில் இந்த இரண்டு இந்தியர்கள்தான் உள்ளனர். டாப் 50 என்று எடுத்துக் கொண்டால், 36வது இடத்தில் ஷபூர் மிஸ்திரி 38.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். 37.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 37வது இடத்தில்  எச்சிஎல் அதிபர் ஷிவ் நாடார் இருக்கிறார். டாப் 50 பட்டியலில் மொத்தம் 4 இந்தியர்கள் உலகப் பெரும் கோடீஸ்வரர்களாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்