தன்னிச்சையான முடிவினை எடுத்திருக்கிறார் ஜெயம் ரவி.. என்னுடன் பேசவில்லை.. ஆர்த்தி பரபரப்பு அறிக்கை

Sep 11, 2024,06:22 PM IST

சென்னை:   ஜெயம் ரவி என்னிடமிருந்து பிரிவதாக  கூறியுள்ளது, என்னுடனும், குழந்தைகளுடனும் ஆலோசிக்காமல் அவராக எடுத்த தன்னிச்சையான முடிவு என்று அவரது மனைவி ஆர்த்தி கூறியுள்ளார்.


தனது மனைவியுடனான திருமண பந்தத்திலிருந்து பிரிவதாக நேற்று முன்தினம் அறிவித்த ஜெயம் ரவி நேற்று விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகளால் அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு கிளம்பியது. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


இதுதொடர்பாக ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:




சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமல் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம் கண்ணியம் மற்றும் தனித்தன்மைய இழந்து விட்டதாக நான் உணர்கிறேன். என் கணவரிடம் மனம் விட்டு பேச என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீப காலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் எனது இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டுமென்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.


ஆழ்ந்த மனவேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலமும் எதிர்காலமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப் போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது.


தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும் மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம், நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டும் இன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிகை ஊடகம் மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவு மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையிலிருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்த்தி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்