எனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுகிறேன் - நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

Sep 09, 2024,06:21 PM IST

சென்னை:   நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


நடிகை ஜெயம் ரவிக்கும், தயாரிப்பாளர் சுஜாதா விஜயக்குமாரின் மகள் ஆர்த்திக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த இந்த திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 


சமீப காலமாகவே இதுகுறித்த தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஜெயம் ரவி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களை கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும் திரை அல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரைத்துறை நண்பர்கள் பத்திரிகை ஊடகத்துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள் என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். 


நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல் வாழ்விற்காக எடுக்கப்பட்டது.


இந்த நேரத்தில் எனது தனி உரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனி உரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.


என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும் எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.


ஜெயம் ரவி - ஆர்த்தியின் பிரிவு அவரது ரசிகர்களை பெரும் சோகத்திலும், வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்