ஜெயம் ரவி - ஆர்த்தி.. மீண்டும் மனம் விட்டு பேச்சு.. ஜனவரி 18ம் தேதிக்கு அடுத்த கட்ட விசாரணை!

Dec 21, 2024,05:59 PM IST

சென்னை: ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிக்கிடையே இன்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.


ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய 15 ஆண்டுகால திருமண உறவில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். 


சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளத்தில் மனைவியை விட்டு பிரிய இருப்பதாக பதிவிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் மனைவி ஆர்த்தி இது ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு. என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என கூறினார். இதனால் சோசியல் மீடியாக்களில் யார் மீது சரி என்று தெரியவில்லை என காரசாரமாக விவாதிக்க தொடங்கினர்.




இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது  குடும்ப நல நீதிமன்றம் சமரச ஆய்வு மையத்தில்  பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. 


குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரத்தின் படி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி  சமரச தீர்வு மையத்தில்  இன்று நேரில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரமாக ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதி இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி முன்பு மத்தியஸ்தர் ஆஜராகி இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்