ஜெயலலிதாவின்  நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: பெங்களூர் கோர்ட்

Jan 23, 2024,05:40 PM IST

பெங்ளூரு: ஜெயலலிதாவின்  நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என  பெங்களூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


1996ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து தங்கம், வெள்ளி, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கு விசாரணை பெங்களூரு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டது. 


வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் 2016ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். அவர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் உறுதிசெய்த நிலையில், நகைகள் பெங்களூரில் தான் இருந்தது.




இவ்வழக்கு தொடர்பாக, பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண்டும் என்றும், அதில் கிடைக்கும் பணத்தில் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனக்கு இதில் உரிமை உண்டு எனவும், நகைகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். 


இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி ஹெ.ஏ.மோகன் கூறுகையில், நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழ்நாட்டுக்கு மாற்றுவது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆகவே தமிழக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அவர் மூலமாக போலீசாருடன் இணைந்து நகைகளை பெற்றுக்கொள்ள வருமாறு உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்