ஜவான் பட்டையைக் கிளப்புது.. அட்லீ அசத்தல்.. ஷாருக் கான் செம.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

Sep 07, 2023,09:58 AM IST
சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகி பாராட்டுக்களையும், புகழாரங்களையும் வாரிக் குவித்துக் கொண்டுள்ளது.

படம் பார்த்த அனைவருமே பிரமாண்டமாக இருக்கிறது.. அட்லீயின் இந்திப் பிரவேசம் அட்டகாசமாக இருக்கிறது. ஷாருக் கான் தான் ஒரு மாஸ் என்டர்டெய்னர் என்பதை நிரூபித்து விட்டார். வேற லெவல் நடிப்பு என்று புகழ்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத்துக்கும் பாராட்டுகள் குவிகின்றன.



ஷாருக்கானின் சொந்தத் தயாரிப்பான ஜவான் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இன்று வெளியானது. இந்தப் படத்தை ஷாருக் கான் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரை ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களது காத்திருப்பு வீண் போகவில்லை என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

செமையான பொழுதுபோக்கு படமாக இது மலர்ந்திருப்பதாக படம் பார்த்தவர்கள் சிலாகிக்கின்றனர். ஜவான் இந்தியாவின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் என்று மும்பையைச் சேர்ந்த திரை விமர்சகர்கள் பலரும் கூறியுள்ளனர். அதேபோல தென்னிந்தியாவைச் சேர்ந்த பல முன்னணி விமர்சகர்களும் கூட படம் வேற லெவலில் வந்திருப்பதாக பாராட்டியுள்ளனர்.

திரும்பிய பக்கமெல்லாம் பாசிட்டிவ் ரெவ்யூக்கள்தான் அதிகம் காணப்படுகின்றன. படத்தின் உருவாக்கம், அட்லீ இயக்கம், ஷாருக் கானின் நடிப்பு, இசை என எல்லாமே அட்டகாசமாக வந்திருப்பதாக பாராட்டுக்கள் குவிகின்றன.

தான் ஒரு மாஸ் இயக்குநர் என்பதை அட்லீ நிரூபித்து விட்டதாக இந்தி விமர்சகர்கள் பாராட்டியிருப்பதுதான் இங்கு முக்கியமானது.  படத்தின் கிளைமேக்ஸ் அட்டகாசம் என்றும் பாராட்டுக்கள் குவிகின்றன. படத்தில் மொத்தம் 7 விதமான கெட்டப்களில் ஷாருக் கான் வருகிறார். அத்தனையிலும் அவர் ஜொலித்துள்ளார். சமூக நீதிக்காக போராடும் கேரக்டரில் ஷாருக்கான் நடித்துள்ளார். அதை லட்டு போல தூக்கிச் சாப்பிட்டுள்ளார்.

ஜவான் விரைவிலேயே ரூ. 1000 கோடி வசூலைத் தாண்டும் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்