அகமதாபாத்: பாகிஸ்தானுடன் விளையாடுவதை விட எனது தாயாரைப் பார்ப்பதற்குத்தான் நான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
அகமதாபாத்தில் அக்டோபர் 14ம் தேதி இந்தியாவும், பாகிஸ்தானும் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ளன. இந்தப் போட்டி குறித்து வழக்கம் போல ஹைப் கிளப்பப்பட்டு வருகிறது. ஏதோ இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கப் போவது என்ற பில்டப்களில் பலரும் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அகமதாபாத் வந்துள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். என்ன பாஸ் பாகிஸ்தானுடன் மோதப் போகும் குஷியா என்று கேட்டால், அட நீங்க வேற.. நான் எங்க அம்மாவைப் பார்க்கப் போறேன்.. அந்த சந்தோஷம்தான் என்று சிரித்தபடி கூறுகிறார் பும்ரா.
உண்மைதான்... பும்ராவுக்கு வேறு எதையும் விட அவரது தாயார்தான் உசத்தி.. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பும்ராவுக்கு 5 வயதாக இருக்கும்போது அவரது தந்தை ஜஸ்பிர் சிங் மரணமடைந்து விட்டார். கைப்பிள்ளையோடு தவித்த பும்ராவின் தாயார் தல்ஜித் கெளர், மிகுந்த தன்னம்பிக்கையோடு தனது பிள்ளையை வளர்த்தார். அவர் ஒரு ஆசிரியை என்பதால் இயல்பிலேயே தனது மகனுக்கு நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார். டீச்சர் வளர்த்த பிள்ளை என்பதால் பும்ரா நல்ல பழக்க வழக்கங்களுடன்தான் வளர்ந்து வந்தார்.
பஞ்சாப்தான் பும்ராவின் பெற்றோருக்குப் பூர்வீகம். சீக்கியரான இவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே குஜராத்திற்கு இடம் பெயர்ந்து வந்து செட்டிலானவர்கள். நீண்ட டூர் போய் விட்டு குஜராத் திரும்பினாலே பும்ரா குஷியாகி விடுவார். அம்மாவைப் பார்க்கப் போகிறோம், அம்மா கையால் சாப்பிடப் போகிறோம் என்ற வழக்கமான குழந்தைகளின் சந்தோஷம்தான் அது. இப்போதும் கூட உலகக் கோப்பைப் போட்டிக்காக அங்குமிங்குமாக போய்க் கொண்டிருக்கும் அவர் பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத் வந்திருப்பதால் குஷியாகியுள்ளார்.
புதன்கிழமை நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்த சந்தோஷத்துடன் தற்போது அம்மாவையம் பார்த்து மகிழ்ந்துள்ளார் பும்ரா.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட 1.30 லட்சம் பேர் இதில் அமர்ந்து போட்டியைப் பார்க்க முடியும். உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இதுதான். இங்கு முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளார் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}