விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில்.. இவங்கெல்லாம் நடிக்கப் போறாங்களா.. புதிய டாக்கால் பரபரப்பு!

Aug 02, 2024,03:39 PM IST

சென்னை:   நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் பற்றி புதிய தகவல் கிளம்பியுள்ளது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்த லைன் படு சுவாரஸ்யமாக இருக்கிறது. நிஜத்தில் இது நடந்தால் வித்தியாசமான படமாக இருக்கும்.


தமிழ் திரைப்படத்தில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். விஜய்க்கு ஒரு மகனும், மகளும் இருப்பது நாம் அறிந்ததே. விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில் மகனுடன் ஆடியிருப்பார். அதேபோல அவரது மகள், தெறி படத்தில் தோன்றியிருப்பார்.  விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடிகராவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ தனது தாத்தா வழியில் இயக்குநராகும் கனவில் இருக்கிறார்.




சில ஆண்டுகளாக ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் படித்து வந்தார். சமீபத்தில் தனது படிப்பை முடிந்து இந்தியா வந்துள்ளார். மேலும், லைக்கா ப்ரோடக்ஷன் நிறுவனம் சார்பில் ஒரு படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானத.  அதன் பிறகு அது என்ன ஆனது என்று தெரியவில்லை. அப்படியே கிடப்பில் இருக்கிறது.


இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேசன் சஞ்சய் தனது படத்தின் ஹீரோவை தேர்ந்தெடுக்க பல்வேறு வளர்ந்து வரும் நாயகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் லேட்டஸ்டாக துரு விக்ரமுடன் அவர் பேசியுள்ளார். அவர்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார என்றும் கூறப்படுகிறது. துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அடுத்தாக தற்போது மகான் படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்திலும் நடித்து வருகிறார்.


அதேபோல ஹீரோயினாக, அதிதி ஷங்கர் நடிக்கலாம் என்று சொல்கிறார்கள். இவர் இயக்குநர் ஷங்கரின் மகள் ஆவார். இசையும் கூட ஒரு வாரிசு தான். அதாவது இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன்தான் இசையமைக்கப் போவதாக சொல்கிறார்கள். நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் களம் காண ஆயத்தமாகி வரும் இந்த வேலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைத்துறையில் நுழைய உள்ளது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

news

அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!

news

98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!

news

பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!

news

Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்