மல்லிகை பூ வாசம் மண் மணக்க.. மனம் மணக்க வீசும்.. இதைப் பிடிக்காதவங்களும் இருப்பாங்களா!

Apr 11, 2024,10:48 AM IST

- பொன் லட்சுமி


அன்றிலிருந்து இன்று வரை பூக்களை பிடிக்காத பெண்கள் உண்டோ.. அதிலும்  குண்டு  மல்லிகை  பூவை பிடிக்காத பெண்கள் இல்லை என்றே கூறலாம்...  மல்லிகை பூவுக்கு  என்று ஒரு தனி இடம் உண்டு. 


வீட்டில் பூஜை முதல்  திருமணம், திருவிழா போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பல்வேறு வகை பூக்களை பயன்படுத்தினாலும்  முதலிடம் பிடிப்பது  இந்த மல்லிகை பூ தான்.. மல்லிகைப்பூவுக்கு உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது.. அழகுக்காகவும் வாசத்திற்காகவும் மட்டுமல்லாமல் இதில் எண்ணற்ற  மருத்துவ குணமும்  அடங்கியுள்ளது...




வீட்டில் மல்லி செடி இருந்தால் இரவு நேரத்திலும் விடியற்காலை நேரத்திலும் அந்த இடம் முழுவதுமே அவ்வளவு வாசனையாக இருக்கும்.. நம்மில் பலருக்கு மல்லிகை பூ என்றாலே  தலையில் வைப்பதற்கும் பூஜை காரியங்களுக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துவது மட்டும்தான் என்று தெரிந்திருக்கும்... ஆனால் அதில் எண்ணற்ற மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது


மல்லிகைப்பூ மூளையின் கீழ் பகுதியில் உருவாகும் வெப்பத்தை குறைத்து  தலையை குளிர்ச்சி அடை செய்கிறது... தலைவலிக்கு சிறந்த மருந்தாகும்.. இலை முதல்  வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணங்கள் வாய்ந்தது..  சிறுநீரக பிரச்சனை வயிற்று பிரச்சனை இருப்பவர்கள் அதனுடன் சிறிதளவு தேன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் விரைவில் குணமாகலாம்..


நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு மல்லிகை பூவை  காய வைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்  விரைவில் நிவாரணம் கிடைக்கும். ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கு ஏற்படக்கூடிய கருப்பை பிரச்சினைகளுக்கும் இந்த பூவை காயவைத்து பொடி செய்து தேனில்  குலைத்து  சாப்பிடலாம்.


மல்லிகை பூவை பச்சையாக சாப்பிடுவதால் மூச்சு திணறல் போன்ற  நோய்களும் வராமல் தடுக்கலாம்.. சில நேரங்களில் குழந்தைகள்  பூவை எடுத்து சாப்பிடும் போது நாம் சாப்பிடக்கூடாது என்று அவர்களை திட்டுவோம்.. இனிமேல் அவர்களை திட்டாதீர்கள்.. அதை சாப்பிடுவது மூலம் பல நோய்கள் அவர்களுக்கு வராமல் தடுக்கலாம்.




குழந்தை பெற்ற இளம் தாய்மார்கள், வேலைக்கு செல்லும் இளம் தாய்மார்கள் முக்கியமாக சந்திக்கும் பிரச்சனை குழந்தைக்கு சரியாக பால் கொடுக்க முடியாததால் பால் கட்டி விடும்... அது அவ்வளவு கொடுமையான வலியாக இருக்கும்.. அப்படி  பால் கட்டிக் கொண்டால் மல்லிகை பூவை அரைத்து மார்பகத்தின் மேல்  பத்து போட்டால் உடனே பால் கரைந்து வெளியேறி விடும்...


மல்லிகைப் பூவலிருந்து வாசனை திரவியங்கள், எண்ணெய்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.. மல்லிகை எண்ணெய் மன அழுத்தத்தை  குறைத்து ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தை  வரவைக்க  மிகச்சிறந்த மருந்தாகும். இரவு தூங்க செல்வதற்கு முன்பாக  கைகளில் சிறிதளவு தடவிக்கொண்டு, அந்த வாசனையை முகர்ந்து கொண்டு தூங்க சென்றால் நிம்மதியான தூக்கம் வரும்..  அதுமட்டுமல்லாமல் மல்லிகை எண்ணெய்   நமது சருமத்திற்கும்  தேமல்  தோல் சுருக்கம் போன்றவற்றை  குறைத்து இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.


பூக்களின் முதல் அடையாளமே அதன் நறுமணம் தான். மல்லிகை பூவிற்கு என்று தனி  மனம் உண்டு.. காலங்காலமாக பெண்கள் மல்லிகை பூவை தலையில் சூடி வரும்போது அவர்கள் கூந்தலுக்கும் நறுமணம் கிடைக்கும்.. ஆனால் இன்று நாகரிகத்தின் வளர்ச்சியினால்  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும்  ஒரு சில இடங்களில்  மல்லிகை பூவை தவிர்த்து பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்... அதேபோல திருமணங்களுக்கு கட்டும் மாலையும் பிளாஸ்டிக் மாலையாக மாறிவிட்டது  சாப்பிடும் பொருள்களில் தான் கலப்படம் என்ற நிலை மாறி தலையில் வைக்கும் பூக்களிலும் கலப்படம் என்ற  நிலை வந்துவிட்டது  வருத்தத்திற்குரிய விஷயம் தான்..


ஆனாலும் இன்றும்  மல்லிகை பூவை  பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் உள்ளனர் என்பதும் மகிழ்ச்சியான விஷயம்தான்... இதில் முக்கியமான விஷயம் என்றால் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யத்தை  வர வைப்பதில் முதல் பங்கு இந்த மல்லிகை பூவுக்கு தான்... கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டால்  மனைவியை சமாதானப்படுத்த கணவன் எடுக்கும் முதல் ஆயுதம்  மூணு முழம்  மல்லிகை பூ தான்.




இன்று இருக்கும் சூழ்நிலையில் அதிலும் முக்கியமாக இல்லத்தரசிகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் .. தோழிகளே  உங்கள் மன அழுத்தத்தை போக்க  மிகப்பெரிய இயற்கை மருந்து இந்த மல்லிகை பூக்கள் தான்... இயற்கையாகவும் அதே அளவில்  மலிந்த விலையிலும் கிடைக்கக்கூடிய இந்த பூக்களை அதிகமாக பயன்படுத்துங்கள். வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு  அதனால ஏற்படக்கூடிய   உடல் சூடும் குறையும். 


என்னங்க  மல்லிகைப்பூ  சீசன் ஆரம்பிச்சாச்சு.. இன்னும் என்ன யோசிச்சுகிட்டே இருக்கீங்க உங்களுக்கு விருப்பமான அளவுக்கு மல்லிகை பூவை வாங்கி தலையில்  வைங்க .. மன அழுத்தமும் குறையும்.. மனசும் லேசாகும்.. அக்கம் பக்கமும் மணக்கும். 


(குறிப்பு: மல்லிகை வாசனை சிலருக்கு ஒத்துக்காது, சிலருக்கு மயக்கம் உணர்வு வரலாம். அவர்கள் மல்லிகையை தவிர்ப்பது நல்லது. மல்லிகைப் பூவை உண்பது உள்ளிட்டவற்றை, உரிய மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மேற்கொள்வது நல்லது)

சமீபத்திய செய்திகள்

news

Most Expensive player in IPL history.. ரூ. 27 கோடிக்கு ரிஷப் பந்த்தை அள்ளிய LSG. அடுத்தடுத்து அதிரடி

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

அதிகம் பார்க்கும் செய்திகள்