டெல்லி: டெல்லி வந்திருந்த ஜப்பான் நாட்டு பிரதமர் பியூமியோ கிஷிடா, இந்தியாவின் பிரபலமான பானிபூரியை ருசித்துச் சாப்பிட்டார். அதை அருகில் இருந்து ரசித்துப் பார்த்து மகிழ்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜப்பான் பிரதமர் கிஷிடோ, இந்தியா வந்திருந்தார். டெல்லியில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹைதராபாத் இல்லத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியும், கிஷிடாவும் பல்வேறு உலகப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்று தனது பேச்சின்போது வலியுறுத்தினார் கிஷிடா.
உக்ரைன் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் இரு நாட்டு பிரதமர்களும் முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தியாவின் பல்வேறு வகையான தின்பண்டங்களை உண்டு ருசித்தார் கிஷிடா.
குறிப்பாக பானிபூரியை அவர் சாப்பிட்டபோது ரொம்பவே ருசித்துச் சாப்பிட்டார். முதலில் ஒரு பானிபூரியை அவர் வாங்கி சாப்பிட்டார்.. வாயில் அது போன சிறிது நேரத்தில் இன்னொன்று வேண்டும் என்று கேட்டு சப்புக் கொட்டி சாப்பிட்டார். அதை அருகில் இருந்து பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இன்னொன்று வைங்க என்று ஊழியரிடம் கூறினார். மேலும் கிஷிடா சாப்பிடுவதைப் பார்த்து புன்னகைத்தபடி ரசித்தார் பிரதமர் மோடி.
27 மணி நேரம் இந்தியாவில் தனது பயணத்தை செலவிட்ட கிஷிடா, மே மாதம் ஹீரோஷிமாவில் நடைபெறும் ஜி 7 மாநாட்டுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதை உடனடியாக பிரதமரும் ஏற்றுக் கொண்டார். இந்த பயணத்தின்போது ரூ. 18,000 கோடி மதிப்பிலான ஜப்பான் கடன் தொடர்பான ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இது மும்பை - அகமதாபாத் ஹை ஸ்பீட் ரயில் திட்டம் தொடர்பானது.
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}