டோக்கியோ: தசையை தின்னும் புதிய வகை பாக்டீரியாவால் ஜப்பானில் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரவ ஆரம்பித்த இரண்டு நாட்களில் உயிரை கொள்ளும் அபாயம் கொண்டதாம். இது உலகம் முழுவதும் பரவினால் கொரோனா போல பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் எழுந்துள்ளது.
streptococcal toxic shock syndrome அல்லது சுருக்கமாக எஸ்டிஎஸ்எஸ் என்று அழைக்கப்படும் இந்த நோயானது, பாக்டீரியாவால் பரவக் கூடியது. இந்த நோய்க்கு ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம் என பெயரிடப்பட்டுள்ளது.
இது மிகத் தீவிரமான உடல் சோர்வை ஏற்படுத்தி இரண்டு நாட்களில் உயிரை கொல்லும் அபாயம் கொண்டது. இந்த நோய் பாதித்த குழந்தைகளிடையே வீக்கம் மற்றும் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது. சில வகை பாக்டீரியாக்கள் மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், தீவிர மூச்சுப் பிரச்சினை, திசு செயலிழப்பு, உறுப்பு செயல் இழப்பு மற்றும் இறப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட கூடுதலாக பதிவாகியுள்ளது. 1999 ஆம் ஆண்டு முதல் தொற்று நோய்கள் பரவலைக் கண்டறியும் தேசிய நிறுவனம் இந்த பாக்டீரியாவை கண்காணித்து வருகிறது.
இது குறித்து டோக்கியோ பெண்கள் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் கென் கிகுச்சி பேசுகையில், இந்த நோயால் அதிக இறப்புகள் 48 மணி நேரத்தில் நடக்கிறது. காலையில் ஒரு நோயாளி பாதத்தில் வீக்கம் இருப்பதை உணர்ந்தால், மதியத்திற்குள் முட்டி வரை பரவும் தன்மை கொண்டது இது. மேலும் 18 மணி நேரத்தில் இறக்கவும் நேரிடுகிறது. இந்த ஆண்டு 2500 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்படலாம். இது 30 சதவீத இறப்பு வீதத்திற்கு வழி வகுக்கும் என அவர் கூறியுள்ளார். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் புண்களை பாதுகாப்புடன் கையாள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் குடலில் இருக்கலாம். மலம் கழிக்கும் போது அவை கைகள் மூலம் பரவலாம் என எச்சரிக்கப்படுகிறது. ஜப்பானில் மட்டுமின்றி 2022 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து ஐரோப்பாவின் ஐந்து நாடுகளிலும் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் முடிவு வந்ததே இவ்வகை பாக்டீரியாக்கள் பரவ முக்கிய காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
{{comments.comment}}