NDAவிலிருந்து விலகவில்லை.. சந்திரபாபுவுக்கு ஆதரவு மட்டுமே.. பவன் கல்யாண் விளக்கம்

Oct 05, 2023,06:20 PM IST


விசாகப்பட்டனம்: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி விலகி விட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை மறுத்துள்ளார் பவன் கல்யாண். கூட்டணியில் நீடிக்கிறோம்.. சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு மட்டுமே தருவதாகவும் பவன் கல்யாண் கூறியுள்ளார்.


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வரும் பல்வேறு கட்சிகள் அடுத்தடுத்து விலக ஆரம்பித்துள்ளன. இவர்கள் எல்லாம் விலக மாட்டார்கள், நீடித்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ஆகும். தமிழ்நாட்டில் பாஜகவின் மிகப் பெரிய பலமே அதிமுகதான். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்து விட்டு போய் விட்டது. இப்போது அந்த இழப்பை எப்படி சமாளிப்பது என்று பாஜக அலைபாய்ந்து கொண்டுள்ளது. 




இந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சியாக ஆந்திர மாநிலத்தில் பாஜகவின் கூட்டணியில் இருந்து வந்த ஜன சேனா கட்சியும் அதிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. இக்கட்சி நடிகர் பவன் கல்யாணின் கட்சியாகும். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணியில் சேருவதாக பவன் கல்யாண் கட்சி அறிவித்தாக முன்பு செய்திகள் வெளியாகின.


இதுகுறித்து பவன் கல்யாண் கூறுகையில்,  ஆந்திர மாநிலத்தின் மிகப் பெரிய கட்சி தெலுங்கு தேசம். அந்தக் கட்சி மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஆதரவு தர வேண்டியது நமது கடமையாகும். இன்று தெலுங்கு தேசம் கட்சி தடுமாறிக் கொண்டுள்ளது. அதைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.  இந்த சூழ்நிலையில் ஜன சேனாக் கட்சியினரின் ஆதரவும், அரவணைப்பும் தெலுங்கு தேசத்திற்குத் தேவை. இருவரும் இணைந்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு கவிழும் என்று கூறியிருந்தார் பவன் கல்யாண்.

பல்டி அடித்த பவன் கல்யாண்

ஆனால் தற்போது அதை மறுத்துள்ளார் பவன் கல்யாண். தனது கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகவில்லை என்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு மட்டுமே தருவதாகவும் பவன் கல்யாண் கூறியுள்ளார். ஏன் இந்த குழப்பமான நிலைப்பாடு என்று தெரியவில்லை.


தெலுங்கு தேசம் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை. இதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில்தான் அந்தக் கட்சிக்கு ஆதரவாக கை கொடுத்துள்ளார் பவன் கல்யாண்.




அதிமுக ஏற்கனவே விலகல்


தென் மாநிலங்களில் வலுவான கட்சியாக பாஜக இருந்து வந்தது கர்நாடகத்தில் மட்டும்தான். அங்கும் கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பறி கொடுத்து விட்டது. தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் எப்படியாவது பெரும் வெற்றியைப் பதிவு செய்து விட அந்தக் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதே அண்ணாமலையை காரணமாக வைத்து கூட்டணியை விட்டு வெளியேறி விட்டது அதிமுக.


இந்த அதிர்ச்சியை அது எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், இது நிரந்தரமா பிரிவா அல்லது சும்மானாச்சுக்கும் டிராமாவா என்ற சந்தேகம் இன்னும் தமிழ்நாட்டில் பலருக்கும் உள்ளது. பிரிவு நிரந்தரமாக இருந்தால் அது பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவேதான் பேட்ச் அப் செய்ய பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.


இந்த நிலையில்தான் ஆந்திராவில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் சந்திரபாபு நாயுடுவே மறைமுகமாக பாஜக ஆதரவாளர்தான். அவர் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பியதைத் தொடர்ந்தே மக்கள் ஆதரவை இழந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் பவன் கல்யாண் அவருடன் கை கோர்ப்பதும்  அதேசமயம், பாஜக கூட்டணியில் நீடிப்பதாகவும் கூறியிருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்