அம்பானி வீட்டு கல்யாணத்திற்காக.. 10 நாட்களுக்கு மட்டும் தரம் உயர்த்தப்பட்ட விமான நிலையம்!

Mar 02, 2024,12:41 PM IST

மும்பை: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற உள்ள முகேஷ் அம்பானி வீட்டு திருமண வைபவங்களுக்காக, அங்குள்ள உள்ளூர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது மத்திய அரசு. இது சர்ச்சையை எழுப்பியுள்ளது.


ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானியின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும்  ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.அதற்கான திருமண வைபவங்கள் குஜராத் மாநிலத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 


ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லரை வர்த்தகம் மற்றும் ஜியோ தளங்களை கவனித்து வருகிறார் ஆனந்த் அம்பானி. இவர்களது திருமணத்திற்கான விழாக்கோலம் கடந்த மாதம் 28ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் 51,000 பேருக்கு உணவு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. 




இந்த விழாவில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உணவு பரிமாறியுள்ளனர். உணவைத் தொடர்ந்து, கிராமத்தை சேர்ந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய நாட்டுப்புற இசையில் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்தனர். சாமானிய மக்கள் முதல் உலக பிரபலங்கள் வரை இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.


இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை ஜாம்நகரில் குவிந்துள்ளனர். குறிப்பாக மைக்ரோசாப்ட நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் சக்கர்பெர்க், டிஸ்னி நிறுவன சிஇஓ பாப் இகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உலக பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர். 


மேலும் உள்ளூரைச் சேர்ந்த நடிகர்கள் அமிர்தாப்பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த்,  தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் திருமண விழாவில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், உலகின் முன்னணி தொழிலதிபர்களும், பிரபலங்களும் வருவதற்கு வசதியாக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் அதாவது, பி.,25 முதல் மார்ச் 5ம் தேதி வரை சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து வழங்கியுள்ளது 

மத்திய அரசு. 


வழக்கமாக நாள் ஒன்றுக்கு 6 விமானங்களை கையாளும் ஜாம்நகரில் நேற்று மட்டும் 140 விமானங்கள் வருகை புரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்குமாறு பல வருடமாக கோரி வருகிறோம். ஆனால் ரிலையன்ஸ் குடும்பத்திற்காக ஜாம் நகர் விமான நிலையத்திற்கு தற்காலிகமாக சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் கொடுத்து பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது மத்திய அரசு என்று அவர் விமர்சித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்