வரலாற்றிலேயே முதல் முறையாக...  இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி.. திரிகோணமலையில் கோலாகலம்!

Jan 06, 2024,12:02 PM IST

திரிகோணமலை: வரலாற்றிலேயே முதன் முறையாக இலங்கை திரிகோணமலையில் சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.


இலங்கையில் இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு முதல் முறையாக இன்று திரிகோணமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் என்பதால் ஒட்டுமொத்த இலங்கையும் ஆர்வமாகியுள்ளது.




இலங்கையில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல நாடுகளிலில் இருந்து திரிகோணமலைக்கு ஏராளமானோர் வந்துள்ளனர். பொங்கல் பண்டிகையும், ஜல்லிக்கட்டு போட்டியும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. இதுவரை தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று முதல் இலங்கையிலும் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாகவே திரிகோணமலையில், மாடுபிடி வீரர்கள், மாடுகள்,வாடிவாசல் என அனைத்தும் தயார் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.


இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், சுற்றுலா துறை சார்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.  சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு  தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 200 காளைகளும், 100க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.




பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்